Thursday, November 12, 2009

இறை இல்லம் கட்ட நிதி உதவி தேவை.

சென்னை கீழ்பாக்கத்தில் இறை இல்லம் கட்ட முயற்சிக்கப்பட்டு வருகிறது.எனவே அல்லாஹ்வின் அருள் நாடி,நிதி உதவி செய்யும்படி சகோதரர்களை வேண்டுகிறோம்.அல்லாஹ்விற்காக இறை இல்லம் கட்டுபவர்களுக்கு,அல்லாஹ் சுவனத்தில் மாளிகை ஒன்று கட்டுகிறான் என்பது ஹதீஸாகும்.

பள்ளிவாசல் கட்ட இடம் வாங்கவும்,கட்டவும் ரூபாய் 50,0000.00 என மதிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, AL-MADRASATHUL DHEENIYATH ( Regd)NO.12,Halls Road, Kilpauk, CHENNAI-600010 என்ற இடத்தில் தொழுகை நடைபெற்று வருகிறது,ஆனால்- 25 நபர்கள் மட்டுமே தொழ இடம் உள்ளது,இன்ஷா அல்லாஹ் இன்னும் நிறைய மக்கள் தொழ வேண்டும் என்றால்,அதற்கு பெரிய பள்ளியாக கட்டினால் மட்டுமே முடியும்.தாராளமாக உதவுங்கள்,இன்ஷா அல்லாஹ்,அதை பன் மடங்காக்கி இம்மையிலும்,மறுமையிலும் தருவான்,ஆமீன்.

மேலும் விவரங்களுக்கு,

saibudeen 91-9841045673

kilpauk muslim welfare association

தகவல்:சைபுதீன்,அதிரை.



மேலும் விவரங்களுக்கும்,படங்களுக்கும்...........

http://peacetrain1.blogspot.com/

Thursday, July 2, 2009

புதிய விடியல் பிறக்கட்டும் !

போதையில்லா புதிய விடியல் பிறக்கட்டும் !

( மெளலவி கீழை ஜஹாங்கீர் அரூஸி, துபை )

மிழகத்தின் நாளைய வரலாற்றை எழுச்சியுடனும் விழிப்புடனும் உருவாக்க வேண்டிய நமது இளைய சமுதாயம் குறிப்பாக இன்றைய இளைஞர்கள் புகையிலை சுவாசத்திலும் மதுவிலும் தங்களை முழுமையாய் ஈடுபடுத்திக் கொள்வதோடு நாளை வரலாற்றை உருவாக்கு முன் இன்றே எங்களை அழித்துக் கொள்கிறோம் என சொல்லாமல் சொல்லும் அவர்களது செயல்பாடுகள் மூத்த குடிமக்கள், அறிவு ஜீவிகள் மத்தியில் பெரும் கவலையை உருவாக்கி வருகின்றன. இன்றைய இளைஞர்கள் வெகு விரைவிலேயே போதை பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போவதற்கு யார் காரணம்? என அலசி ஆராய்வது பேதமைத் தனமாகும்.

சிறு பிள்ளையிடம் கேட்டால் கூட ஆட்சியாளர்கள் தாம் காரணமென்று உடனே சொல்லி விடுவார்கள். தமிழகத்தின் கடந்த கால வரலாற்றை பார்த்தாலே தெரியும்.

1970 க்கு முன்பு ஒரு இளைஞன் ஏதாவதொரு போதை பொருளை பெற வேண்டுமென நினைத்தால் அவ்வளவு எளிதில் அது அவனுக்கு கிடைத்து விடுவதில்லை. இடையில் எத்தனையோ குறுக்கீடுகள் பல நிலையில் அவனை சூழ்ந்து கொள்ளும். இத்தகைய சிரமத் திற்குள்ளும் அதை தேட வேண்டுமா? என்ற கேள்விக் குறியோடு அவன் தனது எண்ணத்தை மாற்றிக்கொண்டு நல் வழிக்கு வந்து விடுவது அன்றைய எதார்த்தமான நிலைபாடு.

ஆனால் இன்றைக்கு எவ்வளவு மாற்றம்? ஒவ்வொரு இளைஞனையும் வழிய தேடிவரும் நிலையில் போதைப் பொருள்கள் காணுமிடமெல்லாம் பாகுபாடில்லாமல் நிரம்பி வழிகிறது. பள்ளிக்கூடம், கல்லூரிகள், மருத்துவமனை வளாகம், பொழுதுபோக்கு கூடங்கள், வீதிகள், தோறும் என இலகுவாக கிடைக்கும் ஒரே விஷயம் கஞ்சா, மது, பீடி, சிகரெட், புகையிலை போன்ற போதைப் பொருள்களே !

இத்தகைய போதைப் புரட்சிக்கு வித்திட்டவர்கள் அந்நிய சதிகாரர்கள் அல்லர். சாட்சாத் நமது தமிழகத்தை கடந்த 40 ஆண்டு காலமாக ஆண்டு வரும் திராவிடக் கட்சிகளே ! என சொல்வதற்கு நமக்கு எவ்வளவு வெட்கமாகவும், வேதனையாகவும் இருக்கிறது.

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவர்களான பேரறிஞர் அண்ணாவும் தந்தை பெரியாரும் கண்ட கனவெல்லாம் தமிழகத்தின் இளைஞர்களை ஒழுக்க முள்ள அறிவு ஜீவிகளாக உருவாக்க வேண்டுமென்பது தான்! அதற்காகவே இயக்கம் கண்டு பல சோதனைகளை சந்தித்த அந்த உத்தம தலைவர்களின் அருமைத் தம்பிகள் என தங்களை மார்தட்டிக்கொள்ளும் இன்றைய ஆட்சியாளர்கள் நமது இளைஞர்களை போதைக்கு தூண்டுவதில் எவ்வளவு ஆர்வம் காட்டி வருகிறார்கள்?

அரசின் கஜானாவை நிரப்ப விலை மதிப்பில்லா நமது இளைஞர்களின் குறுதியும், உயிரும் தான் வேண்டுமா? ஊர் தோறும் ஆலயம் அமைப்போம் ! என்ற சொல் மாறி வீதி தோறும் டாஸ்மாக் அமைப்போம் என்றல்லவா முனைப்புக் காட்டுகிறார்கள்.

40 ஆண்டுகால திராவிடக்கட்சிகளின் ஆட்சிக்குரிய சாதனை களுக்கு மணிமகுடமாய் இருப்பது டாஸ்மாக் தானோ? ஒரு காலத்தில் துண்டு பீடி குடிப்பதற்கே சமூகத்திற்கு பயந்த இளைஞன் இன்று பள்ளிக்கூடம் செல்லும் போதே மது குடித்துவிட்டுப் போகும் அவலங்களும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. பள்ளிக்கூடம் செல்லும் மாணாக்கரின் நெஞ்சத்தில் கல்விக்கண் திறந்த சரஸ்வதியின் நினைவு வரும் என்பது அந்தக் காலம். இன்றோ டாஸ்மாக்கின் நினைவல்லவோ? வருகிறது.

போதை மனிதனுக்கு கேடு என்று தான் எல்லா மதங்களும் போதிக்கின்றன. ஆனால் கடவுள் மதம் இவைகளை ஏற்றுக் கொள்ளாத நாத்திகர்கள் மட்டும் தான் போதைக்கு வெண் சாமரம் வீசுகின்றனர். இப்போது புரிகிறதா? இவர்களின் நாத்திக போக்குக்கு என்ன காரணமென்று போதையின் தீங்கை விவரிக்கும் போது முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இவ்வாறு கூறப்படுகிறது. ‘வீணாக பொருளை விரயம் செய்யாதீர்கள்’ நிச்சயமாக பொருளை விரயம் செய்பவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாக இருக்கின்றனர். (அல்குர்ஆன் 17:26,27) வீண் விரயம் என இங்கு குறிப்பிடுவது மேற்குறிப்பிட்ட போதைப் பொருளுக்காக யார் காசை செலவழிக்கிறார்களோ? அதனையே குறிப்பிடுகிறது காசை கரியாக்காதே!



என்ற மூத்தோர்களின் வழக்கு சொல்லும் பீடி, சிகரெட், மது போன்றவைகளையே குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் தன்னைத் தானே கொலை செய்து கொள்ள முயற்சி செய்யும் போது பிடிபட்டால் தற்கொலை முயற்சி என்ற பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு தண்டிக்கப்படுகிறான். இதை இந்திய தண்டனை சட்டம் கூறுகிறது.

தற்கொலை முயற்சி என்பதற்கு என்ன அளவுகோல் வைத்திருக்கிறது சட்டம்? (Spot Death Suicide) ஒரே நேரத்தில் சாவதா? அல்லது (Slow Motion Suicide) கொஞ்சம் கொஞ்சமாக சாவதா? இரண்டுமே ஒன்று தான் என்றால் புகை மற்றும் மது பழக்கமுடையவர்களை ஏன் இந்த தண்டனை சட்டம் முன் நிறுத்தப்படுவதில்லை?

தற்கொலைக்குப் பயன்படுத்தப்படும் கொடிய விஷப் பொருட்களான அமோனியா, நிகோடின், ஹைட்ரஜன் சயனைடு, மெத்தனால், ஹெக்சாமைன், ஆல்கஹாலில் கலந்துள்ள எத்தனால், பூச்சிக்கொல்லி மருந்தில் கலந்துள்ள ஃபீனால், டி.டி.டி.(D.D.T) விஷம், கார் பேட்டரியில் கலந்துள்ள கேட்மியம், போன்ற பொருட்களைத் தானே பீடி, சிகரெட், மது போன்றவற்றில் கலக்கிறார்கள். இப்பொருட்களை நேரடியாக உட்கொண்டால் (Spot Death Suicide) உடனடி காரணம்! பீடி,சிகரெட்,மதுவாக உட்கொண்டால் (Slow Motion Suicide) மெதுவான மரணம்! இப்படித்தான் மருத்துவ ஆய்வாளர்கள் விளக்கம் தருகிறார்கள்.


தற்கொலை செய்வதும் குற்றமென்றால் செய்ய தூண்டுவதும் குற்றம் தானே? இன்றைக்கு ஆட்சியாளர்கள் இளைஞர்களை (Slow Motion Suicide) மெதுவான மரணத்தின் பக்கம் தூண்டி வரும் போது ஆட்சியாளர்களை யார் தண்டிப்பது?


இந்தியா முழுவதும் பொது இடங்களில் புகை பிடிக்கத் தடைச்சட்டம் கொண்டு வந்துள்ளது பாராட்டிற்குரியது ! (ஆனால் சட்டம் நடைமுறையில் இல்லை என்பது வேறு விஷயம்) அரசின் இந்த முயற்சிக்கு நல்லோர்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும் !


பீடி, சிகரெட், மூலம் வரும் ஆபத்துகள் அதை பயன்படுத்துவோருக்கு மட்டும் தான் என்பதல்ல, அவன் இழுத்து விடும் புகையை சுவாசிக்கும் பக்கத்து மனிதனுக்கும் சேர்ந்தே கேடு வருகிறது.


தவறு செய்பவன் ஒருவன் தண்டனையை அனுபவிப்பது மற்றொருவன் என்பது என்ன நியாயம்? புகை பிடிப்போரே கொஞ்சம் சிந்தியுங்கள் ! பொது இடங்களில் நீங்கள் இழுத்து விடும் புகையை சகிக்க் முடியாமல் எத்தனை பேர்கள் முகம் சுளித்து மூக்கை மூடுகின்றனர். அவர்களின் மன உளைச்சலை ஏன் உங்களால் புரிந்து கொள்ள முடிய வில்லை.



இதைப்பற்றி இஸ்லாத்தின் மாபெரும் தலைவராம் அண்ணல் முகம்மது நபி (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்; “ஒருவன் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பி இருந்தால் அவன் தன் அருகிலிருப் போருக்கு இடைஞ்சல் செய்ய மாட்டான்’ (நபிமொழி – நூல்:புகாரி) பீடி, சிகரெட் பழக்கத்திற்கு அடிமையான முஸ்லிம்களே, உங்களின் செயல் இந்த நபிமொழிக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் உங்களது மறுமை நாளின் நிலையை பற்றி யோசியுங்கள்.



எனது காசு நான் குடிக்கிறேன் இதை தடுக்க நீ யார் என வீராப்பு பேசுபவர்களைப் பற்றி முஸ்லிம்களின் புனித நூலான அல்குர்ஆனில் இறைவன் இவ்வாறு கூறுகிறான் ‘உங்கள் கைகளாலேயே (உங்களை) அழிவின் பால் போட்டுக் கொள்ளாதீர்கள்’(அல்குர்ஆன் 2:195) எவ்வளவு அற்புதமான வார்த்தை! பீடி, சிகரெட், மது போன்றவைகளுக்கு அடிமைப்பட்டவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களை அழித்து வருவதைத் தான் குர்ஆனும் தடுக்கிறது.

மதுவை ஒழிப்பதற்காக போராட்டக் களம் கண்டு கள்ளுக்கடை மறியலில் கைதாகி சிறை சென்ற முதல் பெண்கள் என்ற பெருமை கொண்ட தந்தைப் பெரியாரின் துணைவியார் நாகம்மையாரும், சகோதரி கண்ணம்மாவும் அமைத்து தந்த மது ஒழிப்பு போராட்டக் களம் நாடு முழுவதும் இன்னும் வேகமாக விரிவாக்கம் பெற வேண்டும்.


தந்தை பெரியாரின் கொள்கைகளை இன்றைய தலைமுறைக்கு எடுத்து சொல்ல எடுக்கப்பட்ட “பெரியார்” என்ற திரைப்படத்திற்கு ரூபாய் 95 லட்சத்தை மானியமாக வழங்கி பெருமைப்பட்டுக் கொண்டவர்கள் பெரியாரின் உயிர‌ணைய‌ கொள்கையான மது எதிர்ப்புக் கொள்கையை மட்டும் புறந்தள்ளியது ஏன்?

திரைப்படத்திற்கு கொடுத்த 95 லட்சத்தை பசுமைத் தாயகம் போன்ற மது ஒழிப்பு பிரச்சார இயக்கங்களுக்கு கொடுக்கப் பட்டிருந்தால் பெரியாரின் ஆன்மாவாவது இன்றைய திராவிட தம்பிமார்களை மன்னித்திருக்கும்.

ஒரு காலத்தில் இவன் பீடி, சிகரெட், மது குடிப்பவனா? என்று கோபத்துடன் கேட்ட நம் தமிழகத்தில் இன்று இவன் பீடி, சிகரெட், மது குடிக்காதவனா? என வியப்புடன் கேட்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு நாட்டில் எங்கும் எப்போதும் போதைப் பொருள்கள் நிரம்பி காணப்படுகின்றன.

ஒவ்வொரு சமூகத்தின் இளைஞர்களுக்கும் ஒழுக்கநெறி வழிகாட்டியாக விளங்கக்கூடிய இறைப்பணியாளர்களில் சிலரும் கூட பீடி, சிகரெட், மது போன்ற போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு போய் விட்ட கன்றாவியை என்னவென்று சொல்வது?


மசூதி களின் இமாம்களில் சிலரும், தேவாலயங்களின் பாதிரிமார்களில் சிலரும், கோயில்களின் பூசாரிகளில் சிலரும் கூட பீடி, சிகரெட், பழக்கத்திற்கு அடிமைப்பட்டு போய் தாங்கள் செய்யும் இந்த தவற்றை பிறரின் பார்வையில் படும்படியாக செய்யும் இவர்களை முன்னிலைப்படுத்தி இறைவணக்கம் செய்வோர்கள் யோசிக்க வேண்டாமா?



இதுபோன்ற தவற்றை செய்யும் ஆன்மீகப் பணியாளர்களை அந்தந்த இறைப்பணித் துவத்திலிருந்து உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். அப்போது தான் இறைப்பணியும் தூய்மை யடையும். ஒவ்வொரு சமூகத்தின் பொறுப்பாளர்களும் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

அற்புதமான ஒரு இளைய சமுதாயத்தை வழி கெடுத்து விட்டதோடு நிற்காமல் அடுத்த தலை முறையையும் வழி கெடுக்கும் முயற்சியிலும் தற்போதைய ஆட்சியாளர்கள் ஈடுபட்டு வருவது ஆரோக்கிய மானதல்ல !



நல்லெண்ணம் கொண்டோரும் சிந்தனை வாதிகளும் அவசர,அவசியமாக மது, சிகரெட், பீடி போன்ற தீய செயல்களை எதிர்த்து தீவிர களப் போராட்டம் காண வேண்டிய தருணம் வந்துவிட்டது. இத்தகைய போராட்டத்திற்கு தாய்மார்களின் ஏகோபித்த நல்லாதரவும் கிடைக்கும் ! நாம் காணப்போகும் தீவிர மது ஒழிப்பு போராட்டம் போதையில்லா சமுதாயம் உருவாக்கும் புதிய விடியலாக இருக்கட்டும் !

Sunday, January 18, 2009

இஸ்லாம் பார்வையில் "விதி"

வானங்களையும் பூமிகளையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் எல்லா விதிகளையும் அல்லாஹ் தீர்மானித்து விட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு(ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி


மனிதன் படைக்கப்பட்டு தாயின் கருவரையில் ஒட்டிக் கொண்டிருக்கின்ற நிலையினில் இறைவனது ஏவலால் வானவர்கள் உயிரை ஊதுகிறார். அப்பொழுது நான்கு விபரங்கள் எழுதப்படுகிறது. செல்வம், அவரது தவணை, செயல்பாடு, குணங்கள் இவைகள் பதியப்பட்ட நிலையில்தான் மனிதன் உருப்பெறுகிறான். நூல் திர்மிதி


நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ''விதியைப் பற்றி மட்டும் சர்ச்சை செய்யாதீர்கள்! உங்களுக்கு முன்னர் வாழ்ந்த சமுதாயத்தினர் அழிந்தது விதியில் சர்ச்சை செய்த காரணத்தினாலேயே'' என்று கூறியுள்ளார்கள். (நூல்: அஹ்மத்)

அல்லாஹ் ஒவ்வொரு உயிரையும் படைத்து அதன் ஆயுளையும் அதன் உணவையும் அதற்கேற்படும் சோதனைகளையும் பதிவு செய்கிறான் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னுமஸ்வூது(ரலி) நூல்: திர்மிதி

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்கின்ற செயல்கள் சுயமாக செய்கிறோமா? அல்லது விதிப்படி நடக்கிறதா? என்று உமர்(ரலி) அவர்கள் கேட்டார்கள்.கத்தாபின் மகனே! எல்லாமே ஏற்கனவே எழுதப்பட்ட விதிப்படியே நடக்கின்றன. ஒருவர் பாக்கிய சாலியாக இருந்தால் பாக்கியம் பெறுவதற்கே செயல்படுகிறார், துர்பாக்கியசாலியாக இருந்தால் துர்பாக்கியமடையும் வகையில் செயல்படுகிறார் என்று நபி அவர்கள் விடையளித்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: திர்மிதி

அப்படியெனில் நாங்கள் எல்லாம் விதிப்படியே நடக்கிறது என்று எண்ணி செயல்படாமல் இருக்கலாம் அல்லவா? என்று சஹாபாக்கள் நபி அவர்களிடத்தில் கேட்டார்கள். அதற்கு நபி அவர்கள் இவ்வாறு பதிலளித்தார்கள். “நீங்கள் செயல்படுங்கள்! ஒவ்வொரு வரும் எதற்காக படைக்கப்பட்டுள்ளனரோ அவற்றை செய்ய வேண்டும். நூல்: புகாரி, திர்மிதி

பிரார்த்தனையை தவிர வேறு எதுவும் விதியை மாற்றாது. என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸல்மான்(ரலி) நூல்: திர்மிதிஇதேபோல் ஒருவர் நரகத்திற்கும், தனக்கும் இடையே ஒரு முழம் மட்டுமே உள்ள அளவிற்கு நரகவாசிகளின் செயல்களை செய்து வருவார். விதி அவரை வென்று சொர்க்கவாசிகளின் செயல்களை செய்து சொர்க்கம் நுழைவார் என்று நபி அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூது (ரலி) நூல்: புகாரி, திர்மிதி

மனிதனுக்குரிய நன்மை அல்லாஹ்வுடைய விதியின் மீது திருப்தியுறுவதாகும். மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்விடம் நன்மையைக் கோருவதைக் கைவிடுவதாகும். மேலும் மனிதனுக்குறிய தீமை அவன் அல்லாஹ்வுடைய விதியைக் கொண்டு அதிருப்தியுறுவதாகும் என்று நபி அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃதுப்னு அபீவக்காஸ் (ரலி) நூல்: திர்மிதி

Wednesday, January 14, 2009

கற்சிலைகளை வணங்குவது சைத்தானின் அருவருப்பான செயல்களே!!!

சலீம் நானா அன்றைய தினசரி ஒன்றை புரட்டிக்கொண்டிருந்தார்.ஒவ்வொரு பக்கமும் கேடுகெட்ட அரசியல்,சீரழிவுசினிமா,கொலை,கொள்ளை,கற்பழிப்பு,சாதகம்,சோதிடம்,"த்தூ"காறித்துப்ப வேண்டும் போல இருந்தது அவருக்கு.பேப்பரை மடித்து கக்கத்தில் வைத்துக்கொண்டார்,வெயிலுக்கு முன்னால்,வீடு பொய் சேர வேண்டும் என எண்ணிக்கொண்டார்.

"அஸ்ஸலாமு அலைக்கும்,சலீம்"குரல் வந்த திசை நோக்கி பார்த்தால்,அட நம்ம பஷீர் காக்கா, கையில் உமல் பொட்டியுடன்(பன்னாவா-கொடுவாவா காக்கா)."வ அலைக்கும் சலாம் காக்கா" முகமனுக்கு பதில் சொல்லிவிட்டு முறுவலித்தார் நானா.

"என்ன சலீம்,கையில பேப்பரும் ஆளுமா,எதுனா தேர்தல் செய்தியா?ஆமா,திருமங்கலத்துல யாரு ஜெயிச்சதாம்?என்ற பஷீர் காக்காவை பார்த்து சொன்னார் சலீம் நானா,"தி மு க தான் ஜெயிச்சிருக்கு,ஆனா அதுல நெறைய தில்லுமுல்லு நடந்திருக்குன்னு அம்மா சொல்லுது,அது கெடக்குது காக்கா,பேப்பர தொறந்தா ஒரே சினிமா,சோதிடம்,ராசி பலன் இப்பிடி சீரழிவு கலாச்சாரமும்,மூட நம்பிக்கையும் தான் அதிகம்,எனக்கு ஒரு விளக்கம் தெரியனும்,அதாவது இஸ்லாம் பார்வையில சோதிடம்,ராசி பலன் போன்ற மூட நம்பிக்கைகள் பற்றி நீங்க எனக்கு விளக்கனும்"வேண்டுகோள் விட்டார் சலீம் நானா.

பஷீர் காக்கா சொன்னார்," நாள், நட்சத்திரம் பார்த்தல்(சோதிடம்), சகுனம் பார்த்தல் ஆகியவற்றிற்கும் இஸ்லாத்திற்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. இவை இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு எதிரானாவைகளாகும்."

"ஒருவன் முஸ்லிமாக வேண்டுமெனில் அவன் "நன்மை, தீமை யாவும் இறைவன் புறத்திலிருந்தே ஏற்படுகின்றன என்ற விதியையும்" நம்ப வேண்டும். அவ்வாறு நம்பிக்கை கொண்ட முஸ்லிம் நாள், நட்சத்திரம் பார்ப்பது அந்த நம்பிக்கைக்கு மாறு செய்வதற்கு ஒப்பானதாகும். அவ்வாறு எவரேனும் செய்தால் அவர் பாவமன்னிப்பு தேடி மீள்வது கட்டாயக் கடமையாகும்."

"அடுத்த நிமிடம் இவ்வுலகில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே. அப்படியிருக்க தன்னை போன்ற ஒரு படைப்பான இன்னொரு மனிதனிடம் சென்று நல்ல நேரம் நிச்சயிப்பது, எதிர் காலத்தில் தனக்கு என்ன நிகழும் என்பதை அறிய குறி கேட்பது போன்ற செயல்களில் ஈடுபடுவது அம்மனிதனுக்கு இறைவனுக்கு மட்டுமேயுள்ள எதிர் காலத்தை அறியும் சக்தி இருப்பதாக எண்ணுவதற்கு ஒப்பானதாகும். இதையே திருமறை குர்ஆன்,........அன்றியும் பிற வணக்கம் செய்வதற்காகச்) சின்னங்கள் வைக்கப் பெற்ற இடங்களில் அறுக்கப்பட்டவையும் , அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (உங்களுக்கு விலக்கப்பட்டுள்ளன).........(அல்குர்ஆன் 5:3)

நம்பிக்கையாளர்களே! நிச்சயமாக மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும் , அம்புகள் எறிந்து குறி கேட்பதும் , ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 5:90) என்று இறைவனின் வார்த்தைகளாகக் குறிப்பிடுகிறது."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."

"நாட்களிலோ, நேரங்களிலோ முற்றிலும் நன்மை பயக்கக் கூடியனவும் கிடையாது; முற்றிலும் தீமை பயக்கக் கூடியனவும் கிடையாது. எந்த நேரமானாலும் அதில் சிலர் நன்மையை அடைவார்கள். மற்றும் சிலர் கேடுகளை அடைவார்கள். யாருக்கு எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதை அறிந்தவன் இறைவன் ஒருவனே."இந்தக் காலங்களை மக்களிடையே நாம் சுழலச் செய்கிறோம்" - (அல்குர்ஆன் 3:140) "சுழலும் சக்கரத்தின் கீழ்ப்பகுதி மேலே வரும், மேற்பகுதி கீழே செல்லும். இதுவே இயற்கை நியதி. இவ்வாறே காலத்தைச் சுழலவிட்டுச் சிலரை மேலாகவும் சிலரைக் கீழாகவும் ஆக்கிக் கொண்டிருப்போம் என்று இங்கே அல்லாஹ் தெளிவு படுத்துகிறான்."

"எதிர் காலத்தில் இன்னின்ன நடக்கும் என்பதை இறைவன் நபி(ஸல்) அவர்கள் வாயிலாக சிலவற்றை அறிவித்துத் தந்திருக்கிறான். அவற்றைத் தவிர வேறு எந்த விஷயத்தையும் அறியும் ஞானம் இவ்வுலகில் யாருக்கும் இல்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் கூறாத சிலவற்றை மற்றவர்களால் அறிய முடியும் என நம்பிக்கை வைப்பது அவர்களை வரும் காலத்தை அறியும் பண்பு கொண்ட இறை நிலைக்கு உயர்த்துவதற்கு ஒப்பானதாகும். "

"இன்னின்ன நாட்கள் இன்னின்ன நபர்களுக்கு நல்ல நாட்கள் என்று நம்மைப் போன்ற ஒரு மனிதன் தான் முடிவு செய்கிறான். அவனிடம் சென்று அல்லது அவன் எழுதியதைப் பார்த்து நல்ல நாட்களைத் தீர்மானிக்கிறோம். ""ஒரு மந்திரவாதி(?)யிடம் சென்று எனக்கு நல்ல நாள் ஒன்றைக் கூறுங்கள் என்று சிலர் கேட்கின்றனர். அவரும் ஏதோ ஒரு நாளைக் கணித்துக் கூறுகிறார். அதை நம்பி தமது காரியங்களை நடத்துகின்றனர்.""நம்மைப் போன்ற ஒரு மனிதன் எப்படி இது நல்ல நாள் தான் என்று அறிந்து கொண்டான்? இதைச் சிந்திக்க வேண்டாமா? "

"யாரேனும் சோதிடனிடம் சென்று அவன் கூறுவதை நம்பினால் முஹம்மதுக்கு அருளப்பட்ட மார்க்கத்தை அவன் நிராகரித்து விட்டான் என்பதும் நபிமொழி . (அஹ்மத் 9171) "

"இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உலகத்துக்கெல்லாம் நல்ல நாள் கணித்துக் கூறக் கூடிய பூசாரிகள், சாமியார்கள், ஜோதிடர்களின் நிலைமையை கவனித்தால் அவை அனைத்தும் வயிற்றுப் பிழைப்புக்காக அவர்கள் நடத்தும் ஏமாற்று வித்தை என்பதை அறிந்து கொள்ளலாம். "

"மற்றவர்களுக்கு நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கணித்துக் கூறும் இவர்களுக்கு தங்களுக்கு என்று விஷேசமான நல்ல நாளைத் தேர்வு செய்து தங்கள் வாழ்வை வளப்படுத்திக் கொள்ள ஏன் முடியவில்லை? அவர்களைப் பொறுத்தவரை யாராவது அவர்களிடம் சென்று குறி கேட்கும் நேரம் தான் அவர்களுக்கு நல்ல நேரம். இல்லையெனில் அன்றைய சாப்பாட்டிற்கே அவர்களுக்குத் திண்டாட்டம் தான். இது ஒரு பித்தலாட்டம் என்பதை இதிலிருந்து தெளிவாக உணரலாம்.

"பஷீர் காக்கா சொல்லி முடித்ததும்,சலீம் நானாவுக்கு சந்தோசம் தாங்க முடியவில்லை,"ஸுப்ஹாநல்லாஹ்,இஸ்லாம் ஒவ்வொரு விஷயத்தையும் எவ்வளவு அழகாக விவரிக்கிறது.சத்தியமாக இது ஒரு இறைவனுடைய மார்க்கம்தான்".அவருள் நிம்மதி வெளிப்பட்டது.

http://www.peacetrain1.blogspot.com/

Sunday, January 11, 2009

சென்னையில் டாக்டர் ஜாகிர் நாயக்

இஸ்லாம் அல்லாத மக்களுக்காக உலகம் முழுதும் சென்று,இஸ்லாத்தின் செய்தியை எத்தி வைத்து வரும் சகோதரர் டாக்டர் ஜாகிர் நாயக் அவர்கள்,இன்ஷா அல்லாஹ்,வரும் ஜனவரி பதினேழாம் தேதி,சனிக்கிழமை,பதினெட்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமையும் (JANUARY 17TH AND 18TH 2009 ) சென்னையில் உரையாற்ற இருக்கிறார்கள்.

சென்னையில் கிழக்கு கடற்கரை சாலையில்,ஈஞ்சம்பாக்கத்தில் அமைந்துள்ள இஸ்லாமிக் இண்டெர்நேஷனல் பள்ளி வளாகத்தில்,மாலை ஆறு மணி அளவில் நடைபெற உள்ளது.(ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் வீ ஜி பி கோல்டன் பீச் அமைந்துள்ளது.

எல்லா மத மக்களும் வரவேற்கப்படுகிறார்கள், அனுமதி இலவசம்.பெண்களுக்கு தனி இட வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலதிக விவரம் வேண்டுவோர் கீழ்காணும் முகவரியில் தொடர்புகொள்ளவும்.

IRF CHENNAI,TEL: 42148804/05, EMAIL: IRFCHENNAI@GMAIL.COM

சகோதரர்களே,உங்கள் மாற்று மத நண்பர்களையும் அழைத்து செல்லுங்கள்!தூய மார்க்கத்தை எடுத்து சொல்லுங்கள்!!அல்லாஹ்விடம் நற்கூலி வெல்லுங்கள்!!!

Saturday, January 3, 2009

அட!இது நம்ம ஆளு!!!

சலீம் நானாவுக்கு இருப்பு கொள்ளவில்லை."அடடா என்னமா,பேசுகிறார்.இஸ்லாத்தை அழகா,எவ்வளவு இனிமையா மேற்கோள் காட்டி மாணவர்கள்கிட்டேயும், எல்லா தரப்பு மக்கள்கிட்டேயும் விளக்குகிறார்."பஷீர் காக்காவுக்கு முதலில் புரியவில்லை.சலீம் நானாவைப் பார்த்து கேட்டார்,"என்ன சலீமு,யாரு,என்ன கொஞ்சம் விளக்கமாத்தான் செல்லேன்"என்றார்.

"பஷீர் காக்கா, அந்த சகோதரர் பேரு எஸ்.ஏ.மன்சூர் அலி.நம்ம நீடூர(மயிலாடுதுறை)சேர்ந்தவரு.பி எஸ்சி கெமிஸ்ட்ரி,பி எட்,எம் ஏ சோசியாலஜி,பீ ஜீ டிப்ளோமா கவுன்சிலிங் படிச்சிருக்கார்.கடந்த பத்து வருஷமா இஸ்லாமிய படிப்புத்துறையில ஆசிரியராவும்,மாணவர்களுக்கு கவுன்சிலராகவும் வண்டலூர் கிரசன்ட் ஸ்கூலில் பணிபுரிந்துவிட்டு,மாணவர்கள்,எல்லா தரப்பு மக்கள் என்று மனித வள மேம்பாடு பத்தி,ஆலோசனை,கருத்து பரிமாற்றம் எல்லாம் செய்கிறார்.இது மூலமா நிறைய மாணவர்கள்,தொழில் முனைவோர்,இப்படி எல்லா தரப்பு மக்களும் பயன் பெற்று வர்றாங்க."பஷீர் காக்காவுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை."நம்ம சமுதாயத்துல இப்படி ஒரு ஆளா?சலீமு,இவர நம்ம ஊருக்கு கூட்டி வந்து,மனித வள மேம்பாடு போன்ற கவுன்சிலிங் ஏற்பாடு பண்ணி,மாணவர்களுக்கும்,எல்லா தரப்பட்ட மக்களுக்கும் பயன் கிடக்கிற மாதிரி செய்யணும்,ஆமா அவர பத்தி,எங்க விசாரிக்கிறது?ஆர்வம் பீறிட கேட்டார் பஷீர் காக்கா.

"காக்கா,நீடூர் ஆன்லைன் போயி,உனக்குள் ஒரு சுரங்கம் என்கிற தலைப்புல பாத்தா,அவரோட பேச்சுக்கள வீடியோவுல பாக்கலாம்,நம்ம பீஸ் ட்ரைன் பிளாகில போய், http://www.peacetrain1.blogspot.com/ உனக்குள் ஒரு சுரங்கம் அப்படிங்கிற தொடுப்ப கிளிக் பண்ணினா,நேரடியா அவரோட வெப் சைட் திறக்கும்,அது அவரோட சொந்த வெப் சைட்.அதுல நிறைய கட்டுரைகள,அருமையான விளக்கங்களோட பாக்கலாம்,அதுல இருக்கிற ஸ்பேஷாலிட்டி என்ன தெரியமா,அது குரான் மற்றும் ஹதீஸ் அடிப்படையில விளக்குறதுதான். அதோட அவரோட முகவரியும் குறிச்சுக்கோங்க,எல்லாருக்கும் தேவைப்படும், S.A. Mansoor Ali, 3 – 125 / A, Jinnah Street,NIDUR – 609 203,Nagappattinam Dist, Tamilnadu, INDIA".

"சலீமு,அவரு நீடூருக்கு மட்டும் உள்ள சொத்து கிடையாது,நம்ம சமுதாயத்தோட சொத்து.ஒட்டு மொத்த முஸ்லிம்களோட சொத்து,அவரு மூலமா நம்ம மாணவர்கள் பயன் பெறனும். "பஷீர் காக்கா உறுதியாய் சொன்னார்".

Sunday, December 7, 2008

இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம்.

1949ஆம் ஆண்டு டிசம்பர் 23 அன்று முஸலிம்கள் பாபர் மசூதியில் இரவுத் தொழுகையை நிறைவேற்றிவிட்டு வீடுகளுக்குச் சென்றனர். மீண்டும் வைகறைத் தொழுகைக் காக பள்ளிவாசலுக்கு வந்த முஸ்லிம்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பள்ளிவாசலுக்குள் ராமர், சீதை, இலட்சுமனர் ஆகியோரின் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன. ராமர் தனது ஜென்மஸ்தானத்தில் அவதரித்து விட்டார் என்று ஒரு கும்பல் கலாட்டாவில் இறங்கியது.வன்முறைக் கும்பல் பள்ளிவாசலுக்குள் நுழைந்து சிலை களை வைத்ததாக பைஸாபாத் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இதன் பின்னர் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி புரிந்த காங்கிரஸ் அரசுகள் தொழுகைக்குத் தடை விதித்ததிலிருந்து பாபர் மசூதி பிரச்சினை நாட்டில் மிக முக்கியமான பிரச்சினையாக நீடித்து வருகிறது.'இராமர் கோயிலை இடித்துக் கட்டப்பட்டதே பாபர் மஸ்ஜித்' என்ற புளுகு மூட்டையை சூதுவாது அறியாத இந்துக்கள் மனதில் அவிழ்த்துவிட்டு அவர்களில் பலர் அந்தப் பொய்யை நம்புகின்ற நிலையும் ஏற்பட்டுள்ளது.'இராமருக்காகக் கட்டப்பட்ட கோவில் ஒன்று அயோத்தியில் இருந்து அதை இடித்து விட்டு அந்த இடத்தில் பாபர் மசூதி கட்டப்பட்டது' என்ற சங்பரிவாரத்தின் வாதம் உண்மையாக இருந்தால் பாபர் மசூதிக்காக எந்த முஸ்லிமும் போராடமாட்டார். பிறருக்குச் சொந்தமான இடத்தை ஆக்கிர மிப்புச் செய்து அதில் பள்ளிவாசல் கட்டுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.பாபர் மசூதி பற்றி சங்பரிவாரத்தினரின் வாதங்கள் முற்றிலும் பொய்யாக இருப்பதால் தான் பாபர் மசூதிக்காக முஸலிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.இராமர் என்று ஒருவர் வாழ்ந்ததற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சட்டர்ஜி, ஏ.கே. மஜும்தார், நேரு உள்ளிட்ட பல தலைவர்கள் கூறியுள்ளதன் அடிப்படையில் இராமர் கற்பனைப் பாத்திரம் என்று கூறி பிரச்சினையை நாம் திசை திருப்ப மாட்டோம்.ஏனெனில் அந்த இடத்தில் இராமர் கோவில் இருந்ததா? அது பாபரால் இடிக் கப்பட்டதா? அந்த இடத்தில் பள்ளிவாசல் கட்டப்பட்டதா என்பதுதான் பிரச்சினையே தவிர இராமர் கற்பனைப் பாத்திரமா வரலாற்றுப் பாத்திரமா என்பது அல்ல.இராமர் கற்பனைப் பாத்திரமாகவே இருந்தாலும் அவருக்காகக் கட்டப்பட்ட கோவிலை பாபர் இடித்திருந்தால் அது தவறு என்பதை எந்த முஸலிமும் மறுக்க மாட்டார்.அயோத்தியில் ராமர் பிறந்தாரா?அயோத்தியில், அதுவும் பாபர் மசூதி கட்டப்பட்டிருந்த இடத்தில்தான் இராமர் பிறந்தார் என்ற வாதம் எந்த அளவுக்குச் சரியானது என்பதைக் காண்போம்.இராமரைப் பற்றி இந்துக்கள் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் சங்பரிவா ரத்தினரின் கூற்றுக்களின் அடிப்படையில் எடுக்கக் கூடாது. இந்து மதப் புராணங்களை மேற்கோள் காட்டியே முடிவு செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் மனம் போக்கில் யாரேனும் இராமரைப் பற்றி முடிவு செய்தால் அது அவரது முடிவாகத்தான் இருக்குமே தவிர இந்து மதத்தின் முடிவாக இருக்க முடியாது.இராமரைப் பற்றி முதன் முதலில் வால்மீகி என்பவர் சமஸ்கிருத மொழியில் இராமாயணத்தை எழுதினார். இராமரைப் பற்றி அதில் கூறப்பட்ட விஷயங்கள் தான் இராமரைப் படம் பிடித்துக் காட்டும் கண்ணாடியாகும்.வால்மீகி இராமாயணத்தில் இராமர் பிறந்ததைப் பற்றிக் கூறும்போது, 'அவர் திரேதா யுகத்தில் பிறந்தார் என்று கூறப் பட்டுள்ளது. இந்துக்களின் கால அளவை முறையில் யுகம் என்பது காலத்தை அளக்கும் பெரிய அலகுகளில் ஒன்று. யுகங்கள் நான்கு. அவை:கிருத யுகம் 17,28,000 (பதினேழு இலட் சத்து இருபத்து எட்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது.திரேதா யுகம் 12,96,000 (பன்னிரெண்டு இலட்சத்து தொண்ணூற்று ஆறாயிரம்) ஆண்டுகள் கொண்டது.துவாபர யுகம் 8,64,000 (எட்டு இலட்சத்து அறுபத்து நான்காயிரம்) ஆண் டுகள் கொண்டது.கலியுகம் 4,32,000 (நான்கு இலட்சத்து முப்பத்து இரண்டாயிரம்) ஆண்டுகள் கொண்டது) என்பனவாகும். அதாவது கிருத யுகத்தில் பாதி அளவு கொண்டது திரேதா யுகம். திரேதா யுகத்தில் பாதி அளவு கொண்டது துவாபர யுகம். துவாபர யுகத்தில் பாதி அளவு கொண்டது கலியுகம்.இப்போது நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் காலம் கலியுகம். கலியுகம் கிறிஸ்து பிறப்பதற்கு 3102 வருடங்களுக்கு முன் துவங்குகிறது. இயேசுவுக்குப் பின் 2008 ஆண்டுகள் ஆகின்றன. இதன்படி கலியுகம் துவங்கி 5110 ஆண்டுகள் நடக்கிறது. இந்த யுகத்தில் இராமர் பிறக்கவில்லை.கலியுகத்துக்கு முந்திய யுகம் தூவாபர யுகம். இந்த யுகத்திலும் இராமர் பிறக்க வில்லை. இந்த யுகத்துக்கும் முந்திய யுகம்தான் திரேதா யுகம். இந்த யுகத்தின் கடைசி வருடத்தில் இராமர் பிறந்திருந்தார் என்று வைத்துக் கொண்டால் கூட 8,64,000 + 5,110 = 8,69,110 எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தான் இராமர் பிறந்தார் என்பது வால்மீகி இராமாயணத்தின் தீர்ப்பு.இராமர் பிறந்த காலம் பற்றி வால்மீகி இராமாயணம் கூறுவது போலவே அவர் பிறந்த ஊர் பற்றி கூறும்போது, 'இராமர் அயோத்தி என்னும் பட்டணத்தில் பிறந் தார்' எனக் கூறுகிறது.அப்படியானால் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே அயோத்திப் பட்டணம் இருந்தி ருக்க வேண்டும். ஆனால் உ.பி.யில் உள்ள அயோத்தி எப்போது தோன்றியது என்று பல விதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில், மத்திய அரசாங்கத்தின் தொல் பொருள்துறை சார்பில் அயோத்தியை ஆய்வு செய்து 1976, 77ல் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தனர். அந்த அறிக்கையின் 52, 53 ஆகிய பக்கங்களில் 'அயோத்தி என்ற ஊர் உண்டானதும், அதில் மக்கள் வசிக்கத் தொடங்கியதும் கி.மு. 700ல்தான் இருக்க முடியும்' எனக் குறிப்பிடுகின்றார். அதாவது 2708 ஆண்டுகளுக்கு முன்னர் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்திருக்க எந்த முகாந்திரமும் இல்லை என்று அவர்களின் அறிக்கை கூறுகிறது. இதன் பின்னர், சி.பி.லால், கே.என். தீட்சித் ஆகிய வரலாற்று வல்லுனர்கள் 1979, 80ல் இதை மறு ஆய்வு செய்தனர். தொல்பொருள் துறையினரின் மேற்கொண்ட முடிவு சரியானதே என்று அவர்கள் கண்டுபிடித்தனர்.அயோத்தியில் எட்டு இலட்சத்து அறுபத்து ஒன்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன் இராமர் பிறந்தார் என்று வால்மீகி கூறுகிறார். ஆனால் ராமர் பிறந்ததாகச் சொல்லப்படும் அந்தக் காலத்தில் அயோத்தி என்ற இந்த ஊர் இருந்த தில்லை என்பது தெளிவாகிறது. இராமாயணத்தையும் மறுக்காமல், தொல்பொருள் அறிஞர்களின் கண்டுபிடிப் புகளையும் மறுக்காமல் ஒரு முடிவுக்கு வருவதாக இருந்தால் என்ன முடிவுக்கு இந்துக்கள் வர வேண்டும்?இந்த அயோத்தியின் வயது 2708 ஆண்டுகளாக இருக்கலாம். ஆனால் ராமாயணத்தில் கூறப்பட்ட அயோத்தி இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அந்த அயோத்தி இருந்திருக்கலாம். ஒரு பெயரில் பல ஊர்கள் இருப்பது சாதாரண மானதுதான் என்ற முடிவுக்குத்தான் அவர்கள் வரவேண்டும். அப்போதுதான் நடைமுறை உண்மைக்கு முரணில்லாமலும், இராமாயணத்தை மறுக்காமலும் முடிவு எடுத்ததாக அமையும்.'இராமர் பிறந்தது இந்த அயோத்தி அல்ல; வேறு அயோத்திதான்' என்பதற்கு இராமாயணத்திலேயே இன்னும் பல சான்றுகள் உள்ளன.அயோத்தியைப் பற்றி பேசும் வால்மீகி இராமாயணம் சரயூ நதியைப் பற்றியும் கூறுகிறது. சரயூ நதி அயோத்தியில் இருந்து ஒன்றரை யோஜன் தூரத்தில் உள்ளது என்று கூறுகிறது. ஒன்றரை யோஜன் என்பது இன்றைய கணக்குப்படி 23 கிலோ மீட்டர் ஆகும்.ஆனால் இப்போது நாம் அயோத்தி சென்று பார்த்தால் சரயூ என்ற பெயரில் ஒரு நதி அங்கே ஓடினாலும், அது அயோத்திலேயே ஓடுகிறது. அயோத்தியில் இருந்து 23 கி.மீ. தொலைவில் அது இல்லை. அப்படியானால் இராமாயணத்தில் கூறப்படும் அயோத்தியும் சரயூ நதியும் இது அல்ல. வேறு ஏதோ ஒரு பகுதியில் அயோத்தி என்ற பெயரில் ஒரு ஊரும், அதிலிருந்து 23 கி.மீ தொலைவில் சரயூ என்ற பெயரில் ஒரு நதியும் இருந்திருக்க வேண்டும் என்று நம்பினால்தான் இராமா யணம் கூறுவது மெய்யாகும். ''இந்த அயோத்திதான் அந்த அயோத்தி'' என்று கூறுவது இராமாயணத்தை மறுத்து இந்து மதத்தையே மறுப்பதாக ஆகிவிடும்.அதுபோல் சரயூநதி கங்கை எனும் பெருநதியில் சங்கமம் ஆகிறது என்று வால்மீகி இராமாயணம் குறிப்பிடுகிறது. ஆனால் உ.பி.யில் உள்ள சரயூ நதி கங்கையில் சங்கமம் ஆகவில்லை. மாறாக ராப்தி எனும் நதியில் சங்கமமாகிறது. இதிலிருந்து தெரிய வருவது என்ன? இராமாயணம் குறிப்பிடுவது இந்த அயோத்தியையோ, இந்த சரயூ நதியையோ அல்ல என்பதுதான்.மேலும் சரயூ நதி கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்வதாக வால்மீகி ராமாயணம் வர்ணிக்கிறது. ஆனால் உ.பி. யில் உள்ள சரயூ நதி மேற்கிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்கிறது. அதை ஆய்வு செய்த ஷேர்சிங் என்ற ஆய்வாளர் ஒரு உண்மையைக் கண்ட றிந்து வெளிப்படுத்தியுள்ளார்.நேபாளத்தில் ஒரு அயோத்தி உள்ளது. அதிலிருந்து 20 கி.மீ தொலைவில் ஒரு நதி ஓடுகிறது. அது கிழக்கிலிருந்து மேற்கு நோக்கிப் பாய்கிறது. மேலும் அது கங்கையில் சங்கமம் ஆகிறது என்று அவர் கண்டுபிடித்துள்ளார்.எனவே இராமர் பிறந்த அயோத்தி உ.பி.யில் உள்ள அயோத்தி என்று யாராவது நம்பினால் அவர்கள் இராமாயணத்தை மறுத்தவர்களாகின்றனர். இராமாயணத்தில் கூறப்படும் அடையாளங்களும், தன்மைகளும் எந்த அயோத்திக்குப் பொருந்துகிறதோ அந்த அயோத்திதான் இராமர் பிறந்த அயோத்தி என்று முடிவு செய்வதுதான் இந்துமதத்தின் ஆதாரத்தால் நிரூபிக்கப்பட்ட தாகும்.அயோத்தியில் இராமர் கோவில் இருந்ததா?'பாபர் மசூதி 1528ல் கட்டப்பட்டது. மீர்பாகி என்ற பாபரின் தளபதி அங்கிருந்த ராமர் கோவிலை இடித்துவிட்டு அந்த இடத்தில் கோவிலைக் கட்டினார்! என்ற வாதத்திலாவது உண்மை உள்ளதா என்றால் அதிலும் உண்மை இல்லை.இந்த இராமர் கோவிலை விக்கிரமா தித்த மன்னர் கட்டினார் என்று சங்பரிவா ரத்தினர் கூறுகின்றனர். விக்கிரமாதித்தன் என்பது சோழன், பாண்டியன் போன்ற பொதுப் பெயராகும். சந்திர குப்தர், சமுத்திர குப்தர் உள்ளிட்ட குப்த மன்னர்கள் தான் விக்கிரமாதித்தன் என்ற பெயரால் குறிப்பிடப்படுகின்றனர். அவர்களில் இராமர் கோவிலைக் கட்டிய மன்னர் யார் என்பதைப் பற்றி பலவறாக முரண்பட்டுக் கூறுகிறார்கள். கோவிலைக் கட்டிய விக்கிரமாதித்தன் யாராக வேண்டுமானாலும் இருக்கட்டும். அவர்களின் கூற்று பொய் என்பதில் ஐயம் இல்லை.குப்த மன்னர்கள் உ.பி.யில் சில பகுதி களை ஆட்சி செய்த காலம் கி.பி. 300 முதல் கி.பி. 1100 வரையாகும். இந்த எண்ணூறு ஆண்டுகளில் ஆட்சி செய்த குப்த மன்னர்களே விக்கிரமாதித்தன் எனப்படு கின்றனர்.கி.பி. 300 முதல் 1100 வரை அயோத்தி என்று கூறப்படும் நகரில் மனித சஞ்சாரமே இருந்ததில்லை. இந்திய தொல் பொருள் இலாகாவின் தலைவர் பி.பி. லால், 1975ல் சமர்ப்பித்த ஆய்வ றிக்கை 'தி வீக்' (25.02.90) எனும் ஆங்கில ஏட்டிலும் 'சன்டே டைம்ஸ்' (20.11.87) ஏட் டிலும் வெளியிடப்பட்டது. இந்த அறிக்கையில் பலவிதமான ஆதாரங்களை எடுத்துக் காட்டி அயோத்தி எனப்படும் அந்தப் பகுதியில் குப்தர்கள் ஆட்சி செய்த 300 லி 1100 வரையிலான கால கட்டத்தில் எந்த மனிதனோ, கட்டடமோ, கோவிலோ, வேறு எதுவுமோ இருந்த தில்லை'' என்று அடித்துக் கூறுகிறார்.'மனிதர்கள் வாழாத இடத்தில் குப்தர்கள் கோவில் கட்டினார்கள்' என்று கூறுவது பொய் என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது. இல்லாத கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்பதை இந்து நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்?இராமர் கடவுளாகக் கருதப்பட்டது எப்போது?இராமருக்குக் கோவில் கட்டுவது என்றால் அவரை இந்துக்கள் கடவுளாகக் கருதத் தொடங்கிய பிறகுதான் கட்டுவார்கள். இராமரைக் கடவுள் என்று இப்போது இந்துக்கள் நம்பினாலும் ஆரம்பத்தில் இந்துக்கள் அவ்வாறு நம்பவில்லை. குறிப்பாக, கோவில் கட்டப்பட்டதாக சங்பரிவாரர் கூறும் 300, 1100 குப்தர் காலத்தில் இராமர் கடவுள்களில் ஒருவராகக் கருதப் படவில்லை.கி.பி. ஆறாம் நூற்றாண்டில் அமர சிம்ஹ என்பவர் 'அமர கோஷா' என்ற பெயரில் சமஸ்திருத கலைக் களைஞ்சியத்தை வெளியிட்டுள்ளார். அதில் இந்தியாவில் கடவுளாகக் கருதப்பட்டவர்கள் என்ற பட்டியல் உள்ளது. அந்தப் பட்டியலில் இராமர் இல்லை. அந்தக் காலகட்டத்தில் இந்துக்கள் இராமரைக் கடவுளின் அவதாரமாகக் கருதவில்லை என்பதற்கு இது ஆதாரமாகவுள்ளது.லட்சுமிதர் என்பவர் புனித யாத்திரைத் தலங்கள் என்ற பெயரில் 11 ஆம் நூற்றாண்டுவரை, அதாவது குப்தர்களின் கடைசிக் காலம்வரை இந்தியாவில் இருந்த புனிதத் தலங்களைப் பட்டியல் போட்டுள்ளார். அந்தப் பட்டியலில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.குப்தர் ஆட்சியில் இராமர் கோவில் கட்டப்பட்டது உண்மை என்றால் அந்த ஆலயம் ஏன் புனித யாத்திரைத் தலங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை?அதுபோல் எஸ்.எஸ். ஐயர் என்ற ஆய்வாளர், 'இந்தியக் கோவில்கள், கட்ட டக்கலை, சரித்திரக் குறிப்புக்கள்' என்ற நூலை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் பற்றி அவர் கூறவில்லை. விக்கிரமாதித்தன் கட்டிய கோவில்கள் என்ற தலைப்பில் ஐந்து கோவில்களைக் குறிப்பிட்டுள்ளார். அதில் அயோத்தியின் இராமர் கோவில் இல்லை.ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராமச்சந்திர கத்ரி என்பவர் 1989 நவம்பர் 12 தேதியிட்ட 'ரேடியன்ஸ்' பத்திரிகையில் கட்டுரை ஒன்றை வெளியிட்டார். என்சைக்ளோ பீடியா பிரிட்டானிகா உள்ளிட்ட பல ஆதாரங்களைக் காட்டி, கி.பி. 1100க்குப் பிறகுதான் இராமரைக் கடவுள் என்று கருதி வழிபடும் நிலை உருவானது எனக் கூறுகிறார். அதாவது கடைசி விக்ரமாதித்த மன்னர் காலம் வரை ராமர் என்பவர் இந்துக்களின் கடவுள்களின் அவதாரங்களில் ஒருவராக வணங்கப்படவில்லை.கடவுளாகக் கருதப்படாதவருக்கு குப்தர்கள் கோவில் கட்டினார்கள் என்று மனசாட்சி உள்ள இந்துக்கள் நம்ப முடியுமா? இன்னும் தெளிவாகச் சொல்வதானால், வால்மீகி எழுதிய இராமாயணம் சமஸ் கிருத மொழியில்தான் இருந்தது. சமஸ்கி ருதம் மக்களின் பேச்சு மொழியாக இருக்கவில்லை. பிராமனப் பண்டிதர்கள் மட்டுமே அறிந்த மொழியாகத்தான் இருந்தது. எனவேதான் இராமர், மக்களால் கடவுளாகக் கருதப்படவில்லை.மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் துளசிதாசர் என்பவர் இராமாயணத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார். இதன் பின்னர்தான் இராமாயணம் மக்கள் அறியும் காப்பியமாக ஆனது. துளசி தாசர் இந்தியில் ராமாயணம் வெளியிட்ட பின்பு தான் இராமர் கடவுள் அவதாரம் என்று மக்களால் கருதப்பட்டார்.துளசி தாசர் காலம் என்ன? எந்தக் காலத்தில் இராமர் கோவில் இடிக்கப்பட்ட தாகக் கூறுகிறார்களோ, எந்தக் காலத்தில் பாபர் ஆட்சி புரிந்தாரோ, அதே காலத்தில் தான் துளசி தாசரும் வாழ்கிறார். அதுவும் அயோத்தியில் வாழ்கிறார். 1500 களில்தான் பாபர் ஆட்சி புரிகிறார். அந்த ஆட்சியின் கீழ்தான் துளசி தாசரும் வாழ்கிறார்.இராமாயணம் இந்தி மொழியில் ஆக்கப்பட்டதே பாபர் காலத்தில்தான் என்பதும், பாபர் காலத்தில் இராமர் கடவுளாகக் கருதப்படவுமில்லை. இந்து மக்கள் அவரைப் பற்றி அறிந்திருக்கவும் இல்லை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.இராமாயணமே இந்தியில் மக்கள் மத்தியில் பரவாத காலத்தில் இராமர் எப்படி கடவுளாகக் கருதப்பட்டிருப்பார்? எப்படி அவருக்குக் கோவில் கட்டபட்டிருக்கும் என்பதை நியாயவுணர்வுள்ள இந்துக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.இந்தியாவில் முதல் ஜனாதிபதியாகப் பொறுப்பேற்றவர் டாக்டர். ராதா கிருஷ்ணன். இவரது மகன் சர்வபள்ளி கோபால் இந்து பக்திமானும் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளருமாவார். இவர் ராமர் ஆலயம் பற்றிய ஆய்வுக் கட்டுரையில் ''கி.பி. 1750க்கு முன்பு வரை இந்தியாவில் இராமருக்காக எந்தக் கோவி லும் எந்தப் பகுதியிலும் இருந்ததில்லை. ராமர் கோவில்கள் அனைத்தும் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளே'' எனத் திட்டவட்டமாக அறிவிக்கிறார்.200 ஆண்டுகளுக்கு முன்னால் இராமர் கோவில்களே இந்தியாவில் இருக்கவில்லை என்றால் 1528ல் இல்லாத இராமர்கோவிலை பாபர் எப்படி இடித்திருப்பார் என்று நடுநிலையாளர்கள் சிந்திக்கக் கோருகிறோம்.உண்மை என்னவென்றால் பாபர் மசூதிக்கு அடிக்கல் நாட்டியவர் இப்ரா ஹிம் லோடியாவார். இவர் 1524ல் பள்ளி வாசலுக்கான அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து அவர் அப்பணியைத் தொடர வில்லை. இப்ராஹிம் லோடியைக் கொன்றுவிட்டு அப்பகுதியைக் கைப்பற் றிய பாபர், 1528ல் அந்த அடித்தளத்தின் மீது பாபர் பள்ளியைக் கட்டினார். எனவே பாபர் கோவிலை இடித்தார் என்று கூறு வது முழுப் பொய் என்பது இதன் மூல மும் தெளிவாகிறது.பாபர் கோவிலை இடிப்பவரா?இதுவரை நாம் எடுத்துக் காட்டிய ஆதாரங்கள் மட்டுமே அறிவுடைய மக்களுக்குப் போதுமானதாகும். ஆயினும், ஒரு வாதத்துக்காக அங்கே கோவில் இருந்தாலும் பாபர் அதை இடித்திருக்க மாட்டார்.ஏனெனில், இதே அயோத்தியில் ஹனுமான்கிரி, ஜென்மஸ்தான் உள்ளிட்ட ஐந்து கோவில்களுக்கு செப்புப் பட்டயத் தில் எழுதி பாபர் மானியம் வழங்கியுள் ளார். அந்தக் கோவில்களின் நிர்வாகம் அதை நன்றியுடன் பாதுகாத்து வருகின்றன என்று ராம்ரக்ஷா திரிபாதி என்பவர் தக்க சான்றுகளுடன் தெளிவுபடுத்தியுள்ளார். கோவில்களுக்கு மானியம் வழங்கிய ஒருவர் எப்படி கோவிலை இடிப்பார் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்?மேலும் பாபர் ஆட்சி புரிந்தபோது முஸலிம்களின் சதவிகிதம் இப்போதுள்ள தைவிட பன்மடங்கு குறைவாகவே இருந்திருக்கும். பெரும்பான்மை மக்களின் எதிர்ப்பு இல்லாமல் இருந்தால்தான் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். பெரும்பான்மை மக்களின் வழி பாட்டுத் தலத்தை பாபர் இடித்திருந்தால் அப்போதே மாபெரும் மக்கள் புரட்சி ஏற்பட்டு பாபர் விரட்டியடிக்கப்பட்டிருப்பார். பதவியைத் தக்க வைத்துக்கொள்ளும் நிலையில் உள்ள எந்த மனிதனும் இதுபோன்ற காரியங்களைச் செய்யவே மாட்டார்.பாபர், அவரது மகன் ஹிமாயூன், அவரது மகன் அக்பர் என்று வாழையடி வாழையாக எவ்விதப் புரட்சியும் வெடிக்காமல் ஆட்சி நீடித்தது என்றால் இந்துக்கள் வெறுப்படையும்படி அவரது ஆட்சி அமையவில்லை என்பது தெளிவாகவில்லையா?பாபர் தமது கடைசிக் காலத்தில் தனது மகன் ஹிமாயூனுக்கு பாரசீக மொழியில் ஓர் உயில் எழுதினார். அந்த உயில் மத்திய அரசின் தொல்பொருள் துறையின் கட்டுப்பாட்டில் டெலலியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. அந்த உயிலில்,''மகனே! இந்துக்கள் பெரும்பான்மை யாகவுள்ள ஒரு நாட்டை நீ ஆளப் போகிறாய். இந்துக்கள் பசுவைத் தெய்வமாக மதிக்கின்றனர். எனவே எக்காரணம் கொண்டும் பசுவின் மாமிசத்தை உண்ணாதே! அதனால் இந்துக்கள் உன்னை வெறுத்து விடுவார்கள்'' என்று மகனுக்கு அறிவுரை கூறியுள்ளார்.இந்துக்கள் வெறுத்து விடக்கூடாது என்பதற்காக பசுவின் மாமிசத்தையே தவிர்த்துக் கொள்ளச் சொன்ன பாபர், கோவிலை இடித்திருக்க முடியும் என்று சிந்தனையுள்ள யாராவது நம்ப முடியுமா?பாபர் காலத்தில் அவரது முதல் எதிரியாக இருந்தவர் குருநானக். இவர்தான் சீக்கிய மதத்தின் நிறுவனர். இவர் பாபரை கடுமையாக எதிர்த்து வந்தார். குறிப்பாக பெண்கள் தொடர்பான குற்றச்சாட்டுகள் போன்றவற்றைத்தான் அவர் குறிப்பிடுகிறார். பாபர் கோவிலை இடித்திருந்தால் அதை குருநானக் கட்டாயம் குறிப்பிடாமல் இருக்க மாட்டார். அது மட்டுமின்றி குருநானக் அயோத்திக்கு வந்து பாபர் மசூதியைப் பார்வையிட்டு ரசித்திருக்கிறார் என்று அவரது வரலாறு கூறுகிறது. கோவிலை இடித்து பாபர் பள்ளிவாசல் கட்டியிருந்தால் அந்தக் காலத்தில் வாழ்ந்த அவருக்குத்தான் அது நன்றாகத் தெரியும். கோவிலை இடித்துக் கட்டிய பள்ளிவாசலை அவர் ஒருக்காலும் ரசித்திருக்க மாட்டார்.பாபர் கொடுங்கோலர் என்பதால் பயந்து கொண்டு விமர்சனம் செய்யாமல் மக்கள் இருந்திருக்கலாம் என்று பொய்யாகக் கற்பனை செய்து சிலர் கூறுகின்றனர்.பாபர் கொடுங்கோலராகவோ, இந்துக்களால் வெறுக்கப்பட்டவராக இருக்கவில்லை என்பதே உண்மை. ஒரு வாதத்துக்காக பாபர் கொடுங்கோலர் என்று வைத்துக் கொண்டாலும் இவர்களின் வாதம் சரியானது அல்ல.பாபருக்குப் பின் அவரது மகன் ஹீமாயூன் ஆட்சி செய்கிறார். பாபர் இறந்து 25 ஆண்டுகளில் அவரது பேரன் அக்பர் ஆட்சிக்கு வருகிறார். இவர் இஸ்லாத்தை விட்டு விலகி, தீனே இலாஹி என்ற புதிய மதத்தை உருவாக்கினார். சங்பரிவாரத்தினர் பாராட்டும் அளவுக்கு இந்துச் சார்புடைய மன்னராக இருந்தார் அக்பர்.கோவிலை பாபர் இடித்திருந்தால் அதை நேரில் பார்த்த பலரும் அக்பர் காலத்தில் வாழ்ந்திருப்பார்கள். அக்பருக்கு அவர்கள் அஞ்சத் தேவையில்லை. ''உங்கள் தாத்தா இடித்த கோவிலைக் கட்டித் தாருங்கள்'' என்று ஒரு வார்த்தை சொன்னால் அப்போதே அக்பர் அதைச் செய்திருப்பார். இடித்திருந்தால்தானே கேட்டிருப்பர்கள்? அப்படி எந்தச் சம்பவமும் நடக்கவில்லையே.அதுதான் போகட்டும்! முஸலிம்களின் ஆட்சி முடிவுக்கு வந்து வெள்ளையர்கள் ஆட்சி நடத்தினார்களே! அந்தக் காலம் முதல் நாடு விடுதலை அடைந்த 1948 வரை இதுபற்றி எந்த வழக்கோ, பிரச்சினையோ இருந்ததா என்றால் அறவே இல்லை.வெள்ளையர்களின் 200 ஆண்டு கால ஆட்சியிலும்''கோவிலை இடித்துவிட்டார்கள்; அதை எங்களிடம் தாருங்கள்'' என்று வழக்கு ஏதும் பதிவாகவில்லை. ஒர் காலகட்டத்தில் இந்து முஸலிம் பகைமை மிகவும் உச்சத்தில் இருந்தது. அந்தக் காலத்தில்கூட இதுபோன்ற பிரச்சினை எதுவுமில்லை.1949 டிசம்பர் 23ல் சிலைகளைப் பள்ளி வாசலில் வைத்து பிரச்சினையை முதன் முதலாகத் துவங்கும்வரை இராமர் கோவில் என்ற எந்த விவகாரமும் இருக் கவில்லை.இன்னும் சொல்வதாக இருந்தால் அயோத்தியில் இராமர் பிறந்த இடம் என்ற பெயரில் 30 கோவில்கள் இன்றளவும் உள்ளன. இராமர் பிறந்த இடம் என்று பல இடங்களைக் குறிப்பிட்ட இந்துக்கள் பாபர் மசூதியையும் அதில் ஒன்றாகக் குறிப்பிடவில்லை. 1949ல் சங்பரிவாரம் புளுகு முட்டையை அவிழ்த்து விடும்வரை இதுதான் நிலைமை.எனவே மக்களின் வெறியைக் கிளறி விட்டு அதன் மூலம் ஆட்சியைக் கைப்பற்றலாம் என்று திட்டமிட்டுத்தான் இந்தப் பொய்யைப் பரப்பினார்கள். வெளுத்ததெல்லாம் பால் என்று நம்பும் வெள்ளை மனம் படைத்த இந்து மக்களை ஏமாற்றி வளர்ந்து ஆட்சியையும் பிடித்தார்கள்.இந்துச் சமுதாய மக்களே! இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டிக்காக்க இணைந்து பாடுபடுவோம். பொய்களைப் பரப்பி நமக்கிடையே பகையை விதைப்பவர்களைப் புறக்கணிப்போம்.**********************************************பாப‌ர் மசூ‌தி இடி‌க்க‌ப்ப‌ட்ட நினைவு தினத்தையொட்டி, அம்மசூதியை அதே இட‌த்த‌ி‌ல் மீண்டும் க‌‌ட்டி‌த்தர‌ வலியுறுத்தி த‌மிழகம் முழுவது‌‌ம் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இ‌ன்று ர‌யி‌ல் ம‌றிய‌ல் போரா‌ட்ட‌த்த‌ி‌ல் ஈடுபட்டு கைதானார்கள். பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி த‌மிழக‌ம் முழுவது‌ம் ரயில் மறியலில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், தம‌ி‌ழ்நாடு துவா‌த் ஜமா‌த் உ‌ள்‌ளி‌ட்ட அமை‌ப்புக‌ள் அறிவித்‌திரு‌ந்தன.அதன்படி செ‌ன்னை செ‌ன்‌ட்ர‌ல் ர‌யி‌ல் ‌நிலைய‌த்த‌ி‌ல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக‌த் தலைவ‌ர் எ‌ம்.ஹெ‌ச்.ஜவாஹ‌ிரு‌ல்லாஹ‌் தலைமை‌யி‌ல் நூ‌ற்று‌க்கு‌ம் மே‌ற்ப‌ட்டவ‌ர்க‌ள் கூடி, அயோ‌த்‌தி‌யி‌ல் பாப‌ர் மசூ‌தியை ‌‌மீ‌ண்டு‌ம் க‌ட்டி‌த்தர வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு‌ ‌விவகார‌ம் தொட‌ர்பாக அமை‌க்க‌ப்ப‌ட்ட ‌லிப‌‌‌ர்ஹா‌ன் ‌விசாரணை ஆணை‌ய‌த்த‌ி‌ன் அ‌றி‌க்கை ‌விவர‌ங்களை வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம், பாப‌ர் மசூ‌தி இடி‌ப்பு வழ‌க்‌கி‌ல் கு‌ற்ற‌வா‌ளிக‌ள் அனைவரு‌க்கு‌ம் உடனடியாக த‌ண்டனை வழ‌ங்க வே‌ண்டு‌ம் எ‌ன்பன உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு கோ‌‌ரி‌க்கைகளை வ‌லியுறு‌த்த‌ி முழ‌‌க்க‌ங்‌களை எழு‌‌ப்‌பின‌ர்.‌பி‌ன்ன‌ர் அவ‌ர்க‌ள் ரயில் ம‌றியலில் ஈடுபடுவதற்காக சென்றபோது போலீஸார் அவ‌ர்களை தடு‌த்து நிறுத்தி கைது செ‌ய்தன‌ர்.இதேபோ‌ல் செ‌ன்னை எழு‌ம்பூ‌‌ரிலு‌ம் ம‌றிய‌லி‌ல் ஈடுபட முய‌ன்ற நூ‌ற்று‌‌க்கு‌ம் ‌மே‌ற்ப‌ட்ட இ‌ஸ்லா‌‌மி‌யரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செய்தன‌ர்.மேலு‌ம் விழுப்புர‌ம், சேல‌ம், ஈரோடு, ‌சிவ‌க‌ங்கை, தே‌னி ஆ‌கிய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 100000க்கு‌ம் அதிகமானோர் கைது செய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

Tuesday, October 21, 2008

குஜராத், ஒரிசா, கர்நாடகா… தெற்கிலும் தலைதூக்கும் பார்ப்பன பாசிசம்!







மாதம் ஒன்றாகியும், மத்திய அரசு படைகளை அனுப்பியும், ஊரடங்குச் சட்டம் பிறப்பித்தும், ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது நிற்கவில்லை. ஒவ்வொரு நாளும் கலவரத்தின் கொடூரமான கதைகள் வந்து கொண்டேயிருக்கின்றன.



பாதிரியார்கள் நிர்வாணமாக்கப்பட்டு இரக்கமின்றித் தாக்கப்படுகின்றார்கள். கன்னியாஸ்திரீகள் கும்பலால் கற்பழிக்கப்படுகிறார்கள். அகதி முகாமிலும், காடுகளிலும் தஞ்சமடைந்திருக்கும் கிறித்தவ மக்கள் நிர்மூலமாக்கப்பட்ட தங்களது இருப்பிடங்களுக்குத் திரும்பினால் மீண்டும் அடித்து விரட்டப்படுகிறார்கள்.
"இந்துவாக மாறும்வரை யாரும் ஊருக்குள் நுழைய முடியாது''
என பஜ்ரங்தள் குண்டர்களால் மிரட்டப்படுகின்றார்கள்.



பார்ப்பன இந்து மதவெறியர்களின் கொலைப்படை கிராமம் கிராமமாகச் சுற்றிவந்து கிறித்தவர்களின் வீடுகளையும், தேவாலயங்களையும் தேடித்தேடி நொறுக்குகிறது. காந்தமால் மாவட்டத்தில் தாக்கப்படாத ஒரு கிறித்தவ வீடு கூட இல்லை என்ற நிலைமை உருவாக்கப்பட்டு விட்டது.



சங்கபரிவாரக் கும்பலின் அட்டூழியங்களை போலீசு வேடிக்கை பார்க்கின்றது.ஒரிசாவில் ருசிகண்ட ஒநாய்க்கூட்டம் கர்நாடகத்திலும் தாக்கத் தொடங்கிவிட்டது.
"கர்நாடகத்தை குஜராத் ஆக்குவோம்'
என்ற முழக்கத்தை எடியூரப்பா அரசு அமல்படுத்துகின்றது. கிறித்தவ இளைஞர்களைக் கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைக்கின்றது.



கிறித்தவ மக்களின் மீது தாக்குதல் நடத்தும் பஜ்ரங் தள்ன் கர்நாடக மாநில அமைப்பாளர் மகேந்திரக் குமாரை மட்டும் ஒப்புக்குக் கைதுசெய்து உடனே விடுதலையும் செய்திருக்கின்றது எடியூரப்பா அரசு.



கேரளத்திலும், தமிழகத்திலும் கூட சர்ச்சுக்கள் தாக்கப்பட்டிருக்கின்றன.



"பிரதமர், குடியரசுத் தலைவர், சோனியா காந்தி என எல்லோரையும் சந்தித்து முறையிட்டு விட்டோம்; எந்தப் பயனுமில்லை'' என்று குமுறுகின்றார் ஒரிசாவின் பிஷப்.



கர்நாடகத்திலும் அதே நிலைதான். ஒரிசாவின் கலவரப் பகுதிகளுக்குள் சங்க பரிவாரத் தலைவர்கள் தடையின்றி வந்து செல்கின்றனர். ஆனால் உண்மையறியும் குழுக்களை மட்டும் அரசே தடுத்து நிறுத்துகின்றது.






இவ்வளவு நடந்தும் வாய்திறக்காத கல்லுளிமங்கன் மன்மோகன் சிங் பிரான்சு அதிபர் சர்கோசி தன்னிடம் கண்டனம் தெரிவித்த பிறகு, "ஒரிசாவில் கிறித்தவ மக்கள் தாக்கப்படுவது தேசிய அவமானம்'' என்று மெல்ல வாயைத் திறக்கிறார். அவமானத்தைத் துடைத்தொழிக்கும் வழிதான் இன்றுவரை புலப்படவில்லை.



சென்ற தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியை, "மதச்சார்பின்மையின் வெற்றி' என்று கூறிக்கொண்ட காங்கிரசு, "மதக்கலவரம் செய்வோரை ஒடுக்க தனிச் சட்டம் கொண்டு வரப்படும்' என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் அளித்துள்ள வாக்குறுதியைப் பற்றி, வருடம் நான்காகியும் மூச்சுவிட மறுக்கின்றது.



பார்ப்பன இந்து பயங்கரவாதிகளின் பாசிஸ்டுகளின் கலவரங்களைக் கண்டும் காணாமல் இருந்து கொண்டு, குண்டுவெடிப்புகள் நடக்கும்போது மட்டும் "பயங்கரவாதத்தைத் தடுக்கும்' செயல் திட்டத்தைத் தீவிரப்படுத்துகின்றது.



தற்போது நடைபெற்று வரும் தாக்குதல் தற்செயலானதல்ல; இது திட்டமிட்டு ஒருங்கிணைக்கப்பட்ட தாக்குதல் என்பதைப் பாமரனும் கூடப் புரிந்துகொள்ள முடியும். இசுலாமியப் பயங்கரவாதத்தைக் காட்டி ஊடகங்கள் உருவாக்கும் பொதுக்கருத்து, தானாகவே தனக்கு ஓட்டுக்களை அறுவடை செய்துதரும் என்பதால், கிறித்தவ எதிர்ப்பைத் தீவிரப் படுத்தியிருக்கின்றது பா.ஜ.க.வர இருக்கும் ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரசு அமல்படுத்தி வரும் மறுகாலனியாக்கக் கொள்கைகளால் அதிருப்தியில் இருக்கும் மக்களின் ஓட்டுக்களைப் பெறுவதற்கு ஏற்ற முறையில் சவடால் பேசுவதற்குக் கூட பா.ஜ.க விடம் மாற்றுத் திட்டம் எதுவும் இல்லை.



மக்களின் அதிருப்தியை இந்து மதவெறியின் மூலம் உருமாற்றி அறுவடை செய்யும் நோக்கத்தில்தான் இந்தக் கலவரங்களை நடத்துகின்றது ஆர்.எஸ்.எஸ் கும்பல். மேலும் உ.பி.யில் செல்வாக்கை இழந்துவிட்ட பா.ஜ.க, அதை ஈடுகட்டுவதற்குத் தேவையான நாடாளுமன்ற நாற்காலிகளுக்கு தென்மாநிலங்களைக் குறிவைத்திருக்கின்றது.



இந்தக் கோணத்தில்தான் சமீபத்தில் பெங்களூருவில் நடந்த பா.ஜ.கவின் தேசியக்குழுவில் செயல் திட்டங்கள் பேசப்பட்டன. ராமர் சேதுவை தேசிய சின்னமாக்குவது, அமர்நாத் செல்லும் சாலையையும், நிலத்தையும் தேசிய மயமாக்குவது, காஷ்மீரில் 370 வது சட்டப்பிரிவை நீக்குவது, அப்சல் குருவைத் தூக்கில் போடுவது,



மதமாற்றத்தைத் தடை செய்வது என்பவையே அங்கே மையப்பொருளாக இருந்தன. மொத்தத்தில் இந்து மதவெறியைக் கிளப்பும் அடுத்த சுற்றுத் தாக்குதலுக்கு பா.ஜ.க தயாராகி விட்டது. இந்துவெறியின் உண்மையான தீவிரவாத முகமாக மோடியும், மிதவாத முகமூடியாக அத்வானியும் முன்னிறுத்தப்படும் நாடகம் தயாராகி விட்டது.
சங்கபரிவாரத்தின் இந்தத் தாக்குதல் நிலைக்குப் பொருத்தமாக, நாட்டின் அதிகாரவர்க்கம், நீதித்துறை, ஊடகங்கள் அனைத்தும் துணை நிற்கின்றன. குண்டு வெடிப்பை ஒட்டி நகரங்களில் கொத்துக் கொத்தாக இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்படுகின்றார்கள்.









சென்னை நகரில் இரவில் நடமாடும் இளைஞர்களிடம் "நீ முசுலீமா' என்ற கேள்வியையே முதல் கேள்வியாக எழுப்புகின்றது போலீசு.






வட மாநிலங்களைப் பற்றிக் கூறத் தேவையில்லை. போலீசால் கைது செய்யப்படும் முஸ்லிம் இளைஞர்கள் அனைவரையுமே "தீவிரவாதிகள்' என்று முத்திரை குத்துகிறது போலீசு. உளவுத்துறை கிளப்பும் வதந்திகள் உண்மைச் செய்தியாகின்றன.டெல்லியில் விசாரைணக்காகக் கைது செய்யப்பட்ட இசுலாமிய இளைஞர்களுக்கு பாலஸ்தீனத்தின் இசுலாமிய இயக்கத்தினர் அணியும் முகமூடியை அணிவித்து ஊடகங்களின் முன் ஆஜர் படுத்துகின்றது போலீசு.



வழக்கு, விசாரணை, தண்டனை எதுவும் சட்டத்தின்படியோ, நீதி உணர்வுடனோ நடப்பதில்லை.
பார்ப்பன பாசிஸ்டுகள் உருவாக்கியிருக்கும் "இந்துத்துவ பொது உளவியல்'தான் அனைத்தையும் இயக்குகின்றது.



காங்கிரசு முதல் திராவிடக் கட்சிகள் வரை யாரும் இந்து மதவெறிக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கிப் போடும் திராணியற்றவர்கள் ஆகிவிட்டதால், இந்துவெறி மனோபாவம் மக்களிடையே தட்டிக் கேட்பாரின்றி ஆட்சி செலுத்துகின்றது.



பெரும்பான்மை இந்து வாக்கு வங்கியைக் குறிவைத்தே காங்கிரசும் இயங்குகின்றது. குண்டுவெடிப்பை வைத்து "தீவிரவாதிகளை' கைது செய்யும் வேகம், இந்து மதவெறியர்கள் நடத்தும் கலவரத்தை ஒடுக்குவதில் கடுகளவும் இல்லை. கான்பூரிலும், நான்டேடிலும் தயாரிக்கும் போதே குண்டு வெடித்து நான்கு பஜ்ரங்தள் காலிகள் செத்தனர்.



ஏராளமான வெடிமருந்துகளும், பல இடங்களில் குண்டுகளை வெடிக்கச் செய்யும் வரைபடங்களும் சி.பி.ஐ யிடம் சிக்கின. எனினும் இந்த வழக்குகள் நீர்த்துப்போகச் செய்யப்பட்டன.



அது மட்டுமல்ல, அவர்கள் சொல்லளவில் கூட பயங்கரவாதிகள் என்று அழைக்கப்படவில்லை.சங்கபரிவாரங்கள் ஆட்சியைப் பிடிக்கும் சூழ்நிலை கடந்த 20 ஆண்டுகளில் திடீரென்று வந்து விடவில்லை.



பெரிதும் சிறிதுமாகச் சிறுபான்மை மக்களைத் தாக்கும் கலவரங்கள் நாடெங்கும் ஆயிரக்கணக்கில் நடந்திருக்கின்றன.



அனைத்திலும் அரசு, அதிகார வர்க்கம், நீதித்துறையின் உதவியோடு கேட்பாரின்றித் தாக்கப்பட்டிருக்கின்றார்கள் சிறுபான்மை மக்கள்.
இன்றைய இசுலாமிய இளைஞர்கள் எனப்படுவோர், 80 களின் பிற்பகுதி முதல் புதிய பரிமாணத்துடன் தலைவிரித்தாடத் தொடங்கிய இந்து மதவெறியின் சாட்சியங்களாகத்தான் வளர்ந்து இளைஞர்களாகி இருக்கின்றனர்.



அவர்கள் இந்திய ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கூறுவதற்கு ஆதாரமாக ஒரு துரும்பைக் கூட யாராலும் எடுத்துக் காட்டமுடியாது.இவர்கள் காலத்தில், 1987 இல் பகல்பூரில் 1000 முசுலீம்கள் படுகொலை செய்யப்பட்டனர்.



படுகொலையை துணை இராணுவப் படையே முன்நின்று நடத்தியது. கொல்லப்பட்ட விவசாயிகள் காலிஃபிளவர் வயல்களில் புதைக்கப்பட்டனர்.
92 பம்பாய் படுகொலையின் குற்றவாளிகளாக ஸ்ரீகிருஷ்ணா கமிஷன் பட்டியலிட்ட போலீசார் பதவிஉயர்வு பெற்றிருக்கின்றனர்.



முதல் குற்றவாளி தாக்கரே இன்னமும் மும்பையை ஆண்டு கொண்டிருக்கின்றான்.2002 குஜராத் இனப்படுகொலையின் நேரடி ஒளிபரப்பை உலகமே கண்டது. அதன் பின்னும் மோடி முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டான். தெகல்கா ஏடு பதிவு செய்த குற்றவாளிகளின் வாக்குமூலம் நீதிமன்றங்களில் உறங்கிக் கொண்டிருக்கின்றது.



காங்கிரசு முதல் மதச்சார்பின்மை பேசும் ஓட்டுக்கட்சிகள் யாரும் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்காக எதுவும் செய்ததில்லை. மாறாக குற்றவாளிகளைப் பாதுகாத்திருக்கின்றார்கள்.அதே நேரத்தில் கோத்ரா ரயில்பெட்டி எரிப்பையொட்டிய பொய்வழக்கில் கைது செய்யப்பட்ட முசுலீம்கள் இன்னும் சிறையில் இருக்கிறார்கள்.



குஜராத்தின் மக்கள் தொகையில் முசுலீம்களின் சதவீதம் ஒன்பதுதான். ஆனால் கைதிகளில் 25 சதவீதம் பேர் முசுலீம்கள்.
மும்பைக் குண்டுவெடிப்பில் குற்றம் சாட்டப்பட்ட முசுலீம்களில் எண்பது சதவீதம் பேருக்கு தண்டனை வழங்கப்பட்டிருக்கின்றது.



ஆனால் மும்பை கலவர வழக்குகளில் 0.8 சதவீதம் பேருக்குக் கூட தண்டனை கிடைக்கவில்லை.



"குஜராத் கலவரத்தில் ஈடுபட்டவன் இந்த நாட்டின் மதிப்பிற்குரிய குடிமகன்; ஆனால் குண்டு வைப்பவர்கள் தேசத்திற்கு எதிராகப் போர் தொடுப்பவர்கள்'' என்று அவுட்லுக் வார ஏட்டில் திமிராக எழுதுகின்றார் பா.ஜ.க சார்பு பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா.



இந்து மதவெறியர்கள் தாங்கள் நடத்தும் கலவரங்கள் அனைத்தையும், இந்துக்களின் பதிலடி நடவடிக்கைகளாகத்தான் சித்தரிக்கின்றனர். இது அவர்களுடைய வழக்கமான கோயபல்ஸ் உத்தி.



மும்பை ராதாபாய் சால் பகுதியில் இந்துக்கள் எரிப்பு, கோத்ராவில் ரயில்பெட்டி எரிப்பு, ஒரிசாவில் விசுவஇந்து பரிசத் தலைவர் லட்சுமாணந்தா சரஸ்வதி கொலை என்று ஒவ்வொரு கலவரத்துக்கும் ஒரு முகாந்திரத்தைக் காட்டுகின்றார்கள்.
ஒரிசா கலவரம் என்பது பொறுமையிழந்த இந்துக்கள் கொடுத்த பதிலடி என்கிறார் பா.ஜ.க தலைவர் இல. கணேசன். ஆனால் குஜராத் படுகொலைக்கு இந்தியன் முஜாகிதீன்கள் "பதிலடி' கொடுக்கும்போது மட்டும் அது பயங்கரவாதமாகி விடுகின்றது.



" வி.இ.பரிசத் தலைவரைக் கொன்றது நாங்கள்தான்'' என்று ஒரிசாவில் மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தாலும் "கிறித்தவர்கள்தான் அந்தக் கொலையைச் செய்தார்கள்' என்று கூறி "பதிலடி' கொடுக்கின்றது இந்து மதவெறிக் கும்பல்.



இப்படியொரு முகாந்திரம் கிடைக்கவோ, அல்லது முகாந்திரத்தை உருவாக்கினால் அடுத்தகணமே தாக்குதல் தொடுக்கவோ தயாரான ஒரு படுகொலை எந்திரம் அவர்களால் உருவாக்கி வைக்கப்பட்டிருக்கின்றது.



இந்தப் படுகொலை எந்திரத்தின் அடிப்படை இந்துப் பெரும்பான்மையின் பொதுக்கருத்தாக இருக்கிறது.பார்ப்பனியத்தால் இந்து என்ற மாயையில் அடிமைப்படுத்தப்பட்டுள்ள பெரும்பான்மை மக்களை திரட்டுவதுதான் இதனை முறியடிப்பதற்கான ஒரே வழி.



மற்றபடி அப்பாவி மக்களைக் கொல்லும் குண்டுவெடிப்புக்கள் எதிரிக்குத்தான் பயன்படும்.
சமீபத்திய குண்டு வெடிப்புகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் இந்தியன் முஜாஹிதீன்களின் கூற்றில் உண்øமையிருந்தாலும் அதாவது இந்து மதவெறியர்களை இந்தியா தண்டிக்கவில்லை போன்ற இந்த வழிமுறை பார்ப்பன பாசிசத்தைத்தான் வலுப்படுத்தும்.



அவர்களுடைய குண்டுகள் கொல்லப்படுபவன் இந்துவா, முசுலீமா என்று மதம் பார்க்கவில்லையே தவிர வர்க்கம் பார்த்துத்தான் கொன்றிருக்கின்றன. இதுவரையிலும் மதவெறிக்குப் பலியாகாத ஏழை எளிய மக்களை இத்தகைய குண்டுவெடிப்புகள் மிகச்சுலபமாக இந்து மதவெறியர்களின் பால் சேர்த்து விடும்.
இந்து மதவெறியர்களோ உழைக்கும் மக்களை மதத்தால் பிளவுபடுத்தும் தமது இலக்கில் குறிவைத்துச் செயல்படுகின்றார்கள்.



ஒரிசாவில் பழங்குடி மக்களுக்கும் அதில் ஒரு பிரிவான தலித் பழங்குடி மக்களுக்கும் உள்ள சமூக, பொருளாதார மற்றும் இட ஒதுக்கீடு போன்ற முரண்பாடுகளை மதரீதியான பிளவாக இந்து மதவெறியர்கள் மாற்றியிருக்கின்றார்கள்.



இப்படி இரண்டு வகையிலும் பா.ஜ.க ஆதாயமடைந்திருக்கின்றது.
இந்து மதவெறியை எதிர்க்கும் மதச்சார்பற்ற சக்திகளையும் இத்தகைய குண்டுவெடிப்புகள் பலவீனமாக்குகின்றன.



ஆத்திரம் மட்டுமே இந்த வழியை நியாயப்படுத்தி விடாது. குண்டு வெடிப்புகளையும் அதன் பயங்கரவாதத்தையும் பல இசுலாமிய அமைப்புகள் கண்டித்திருக்கின்றன. ஆனால் கிறித்தவர் மீதான தாக்குதலை எந்த இந்துமதத் தலைவரும் கண்டிக்கவில்லை.
மாறாக நியாயப்படுத்துகின்றார்கள். ஏனென்றால் கருத்துரீதியாக அவர்கள் தாக்குதல் நிலையில் இருக்கிறார்கள்.



இதனை முறியடிக்க இந்து மதவெறியர்களின் கலவரங்களுக்கு மவுன சாட்சியாக அங்கீகாரம் கொடுக்கும் இந்துப் பெரும்பான்மையை கருத்துரீதியாகப் போராடி வெல்வது ஒன்றுதான் வழி.

Saturday, October 18, 2008

இந்து வேதங்களில் இஸ்லாம்

இந்து வேதங்களில் இஸ்லாம் பற்றியும்,ஏக அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என அவைகள் கூறும் கூற்றுக்கள் பற்றியும்,நபிகள் கோமான் ஸல் பற்றியும் உள்ள இந்து வேத சமஸ்கிருத மந்திரங்கள் குறித்து...........!
பவிஷ்ய புராணத்தில் பின்வரும் சுலோகம் பூரணமாக:
”ஏதஸ் மின்னந்தரே மிலேச்சர் ஆச்சார்யண ஸமன் வித மஹாமத் இதிக்கியாதசிஷ்ய சாகா ஸமன்விதநிருபஸ்சேவ மஹாதேவமருஸ்தல நிவாஸினம்” (பவிஷ்ய புராணம் 3,3,5-8)
இதன் பொருள்:“அந்நிய நாட்டிலே ஒரு ஆசாரியார் (ஆன்மிக குரு) தம் சீடர்களுடன் வருவார். அவருடைய பெயர் மஹாமத் (முஹம்மத்). அவர் பாலைவனப் பகுதியைச் சேர்ந்தவராக இருப்பார்.”மேலும் அதே புராணத்தில் அந்த ஆசாரியாரின் இனம், தோற்றம்,பழக்க வழக்கங்கள் ஆகியன பற்றியும் கூறப்பட்டுள்ளது. ”அவர்கள் ‘கத்னா (லிங்கசேதி) செய்வார்கள், குடுமி வைக்கமாட்டார்கள், தாடி வைத்திருப்பார்கள், மாமிசம் உண்பார்கள், சப்தம் போட்டு (அதான்) அழைப்பார்கள், முஸைல (முஸல்மான்) என அழைக்கப்படுவார்கள்” என்று அது கூறுகிறது (பவிஷ்ய புராணம், 3:25:3) மேலும் காண்க, அதர்ணவேதம் 20வது காணம், ரிக்வேதம், மந்திரம்:5, சூக்தம்:28இறைத்தூதர் இப்ராஹீம் (அலை) இஸ்மாயீல் (அலை) அவர்களின் பிரார்த்தனைகள், திருக்குர்ஆனில்:2:127. இப்ராஹீமும் இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது ”எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்” (என்று கூறினர்).2:128. ”எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும் அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”2:129. ”எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து அவர்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுத்து அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும் பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.” (என்றும் பிரார்த்தித்தார்கள்)
இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வருகை, மார்க்கம், சமுதாயம் ஆகியவை பற்றி முந்தைய வேதங்களில் முன்னறிவிப்பு செய்யப்படடிருந்தது.இறைத்தூதர் மோசே (மூஸா (அலை) அவர்களின் முன்னறிவிப்பு பழைய ஏற்பாட்டில்:”உன் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல ஒரு தீர்க்கதரிசியை உனக்காக உன் நடுவே உன் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணுவார், அவருக்கு செவிகொடுப்பீர்களாக! (உபாகமம்,18:15)”உன்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை நான் அவர்களுக்காக அவர்கள் சகோதரரிலிருந்து எழுப்பப் பண்ணி, என் வார்த்தைகளை அவர் வாயில் அருளுவேன், நான் அவருக்குக் கற்பிப்பதையெல்லாம் அவர்களுக்குச் சொல்லுவார்” (உபாகமம், 18:18)புதிய ஏற்பாட்டில்:மோசே (மூஸா (அலை) பிதாக்களை நோக்கி, உங்கள் தேவனாகிய கர்த்தர் என்னைப் போல் ஒரு தீர்க்கதரிசியை உங்களுக்காக உங்கள் சகோதரரிலிருந்து எழும்பப் பண்ணுவார், அவர் உங்களுக்குச் சொல்லும் எல்லாவற்றிலும் அவருக்குச் செவிகொடுப்பீர்காளக. (அப்போஸ்தலர்,3:22)நபி இப்ராஹீம் (அலை) அவர்களுடைய புதல்வர் இஸ்ஹாக் (அலை) அவர்களின் பரம்பரையில் தோன்றியவர்களே இஸ்ரவேலர்கள். அவர்களுடைய சகோதரர் இஸ்மாயீல் (அலை) அவர்களது பரம்பரையில் வந்தவரே இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. (இப்னு கஸீர் அடிக் குறிப்பு)இந்து நண்பர்களே,நீங்கள் பின்பற்றப்பட வேண்டிய மார்க்கம் இஸ்லாம்தான்,நீங்கள் பின்பற்ற வேண்டிய ஒரே தலைவர் நபிகள் நாயகம் மட்டுமே.சிந்தியுங்கள்.அல்லாஹ் நேர்வழி தர போதுமானவன்.இதே போல் பழைய,புதிய ஏற்பாட்டிலும் நபிகள் நாயகம் குறித்து முன் அறிவிப்பு உள்ளதை கிறிஸ்தவ நண்பர்கள் http://egathuvam.blogspot.com என்ற தளத்தில் காணலாம்.

Friday, October 17, 2008

தீண்டாமைக் கொடுமை .............!

முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் திருவாரூர் மாவட்டம் குடவாசல் தாலுக்கா திருபாம்புரம் ஊராட்சியைச் சேர்ந்த கிராமம் கம்பூர் ஆகும். கம்பூர் கிராமத்தைச் சுற்றி வடக்குவேரி, திருபாம்புரம், வள்ளார் கோவில்பத்து ஆகிய கிராமங்களைச் சுற்றி முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வாழ்ந்து வருகின் றனர். கம்பூர் கிராமம் வடக்குத் தெரு, பள்ளிவாசல் தெரு, மெயின் ரோடு, புதுமனைத் தெரு ஆகிய நான்கு தெருக்களில் மட்டும் சுமார் 150 முஸ்லிம் குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு கம்பூர் பகுதியை இணைக்க பேரளம் - அன்னியூர் சாலையில் ரூ.69 லட்சத்தில் தார்சாலை போடப்பட்டது. அந்தந்த ஊர் பகுதியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. ஆனால் திரும்பாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ரவி, ராமு, பாண்டியன், கலியபெருமாள் ஆகியோர் முஸ்லிம் விரோதப் போக்கை கடைப்பிடித்துள்ளனர்.
கம்பூர் முஸ்லிம்கள் வாழும் பகுதி யாக உள்ளது. முஸ்லிம்கள் அனைவரும் தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்கள். அவர்கள் நம் கிராமத்தை ஆக்கிரமித் தால் நமது கிராமமும் முஸ்லிம் கிராமமாக மாறிவிடும் என்ற விஷமத்தனமான பிரச்சாரத்தை செல்வராஜ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழு கிராமத்தைச் சுற்றிலும் பரப்பி, அதன்மூலம் குளிர்காய திட்டமிட்டனர்.
அதன் ஒரு பகுதியாக கம்பூர் என்று பெயரிடப்பட்ட மஞ்சள் நிற அறிவிப்புப் பலகையை செல்வராஜ் தலைமையிலான கும்பல் கடப்பாரை, உருட்டுக் கட்டை போன்ற ஆயுதங்களைக் கொண்டு நாசப்படுத்தியுள்ளது. பிறகு ``இதனை எந்த துலுக்கன் கேட்டாலும் வெட்டு’’ என்று கூறி அந்த அறிவிப்புப் பலகையை அங்கிருந்து அகற்றி ஊருக்குள் எடுத்துச் சென்றது.
பொறுமை காத்த முஸ்லிம் இளைஞர் களும் ஜமாஅத்தார்களும், கம்பூர் பெயர்ப் பலகை வைப்பதற்கு ஊராட்சி மன்றத் தலைவரிடம் அனுமதி பெற்று மீண்டும் பெயர்ப் பலகையை வைத்தனர். ஆனால் இரவோடு இரவாக அதுவும் பிடுங்கப் பட்டுள்ளது.
இதையடுத்து ஜமாஅத் தலைவர் சகாபுதீன், சம்பந்தப்பட்டவர்களிடம் ``ஏன் இப்படி செய்கிறீர்கள்?’’ என கேட்க, “வாயை மூடிக்கொண்டு போய்விடு. இல்லையென்றால் உன்னையும் உங்க ளது ஊரையும் தொலைத்து விடுவோம்’’ என்று மிரட்டியுள்ளனர். இச்செய்தியை அறிந்த ஜமாஅத்தார்களும், இளைஞர் கள் வெகுண்டெழுந்தனர். ஆனால் ஜமாஅத் பெரியவர்களின் ஆலோச னைக்கு இணங்க, அருகில் உள்ள சுரைக்காயூர், மாளிகை நத்தம், துலார், கருப்பூர், திருபாம்பூர் ஆகிய கிராமங் களைக் கூட்டி பேச்சுவார்த்தை நடை பெற்றது.
திருபாம்புரத்தைச் சேர்ந்த நாட்டாண்மை என்று அழைக்கப்படும் கிரா மத் தலைவர் கலியபெருமாள், கம்பூர் என்ற ஊரே இல்லாத நிலையில் பேச்சு வார்த்தை எதற்கு? என்று கூறி எழுந்து சென்றுவிட்டார். ஐந்து கிராம பஞ்சாயத் திற்கும் அவர் கட்டுப்படாததால் ஜமாஅத் சார்பில் பேரளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கம்போல் காவல்துறை புகாரை கிடப்பில் போட்டது. இதையடுத்து நன்னிலம் டி.எஸ்.பி. நாராயணசாமியிடம் புகார் அளித்துள்ள னர். இருதரப்பினரையும் அழைத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட போது திருபாம்புரம் பகுதி மக்களுக்கு ஆதர வாகப் பேசி அனுப்பி வைத்துள்ளார்.
பொது விநியோகக் கடை, முஸ்லிம் களுக்குச் சொந்தமான விவசாய நிலங்கள் திருபாம்புரம் பகுதியில் தான் அமைந்துள்ளது. ஆனால் திருபாம்புரத் தைச் சேர்ந்த செல்வராஜ் தலைமையில் கடந்த 5.9.08 அன்று முதல் முஸ்லிம் களுக்கு டீ கொடுக்கக்கூடாது, பொது விநியோக கடையில் பொருட்களை வழங்கக்கூடாது, விவசாய வேலை செய்ய கூலி ஆட்கள் செல்லக்கூடாது என்று ஊர் கட்டுப்பாடு விதித்துள்ளனர்.
இதனால், முஸ்லிம்கள் திருப்பாம்புரத் தில் டீ குடிக்கச் சென்றால் டீ தர மறுத் துள்ளனர். டிராக்டர் உழுவதற்கு எடுத் துச் சென்றால் இரும்பு பைப்கள், உருட் டுக் கட்டைகளை சாலையில் போட்டு தடுத்துள்ளனர். வயல் வேலைகளுக்கு கூலி ஆட்கள் செல்லக் கூடாது என்று தடை விதித்துள்ளனர். மேலும் கம்பூர் பகுதி முஸ்லிம்களிடம் பேசினால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அடுக்கடுக்கான கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். இச்செயல் இந்திய இறையாண்மை சட்டத்தின்படி தங்களது வாழ்வாதார சூழல் மற்றும் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளதாக கம்பூர் முஸ்லிம்கள் மனம் வெதும்புகின்றனர்.
இந்நிலையில் காவல்துறையிடம் திருபாம்புரத்தைச் சேர்ந்த செல்வராஜ், ராமு, ரவி, கலியபெருமாள், பாண்டியன் ஆகியோர் மீது கம்பூர் முஸ்லிம்கள் புகார் அளித்தனர். மேலும் தாசில்தாரிடமும் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து தாசில்தார் தலைமையில் இருதரப் பினரும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அமைதிப் பேச்சுவார்த்தை உடன்பாட்டிற்குப் பின்பும் அதே நிலை நீடித்தது. மாநிலத் துணைச் செயலாளர் பேரா.ஹாஜாகனி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரை தொலைப்பேசி யில் தொடர்புகொண்டு கம்பூர் தீர்வு காண வலியுத்தினர். திருவாரூர் ஆர்.டி.ஓ. தலைமையில் கடந்த 22.09.08 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது சமூக பகிஷ்கரிப்பு நடவடிக் கையைக் கைவிடுவது என்றும், விவசாய கூலி வேலைக்கு செல்வதை தடுத் தாலோ அல்லது கடைகளில் பொருட்கள் வழங் கப்படவில்லை என்று தெரிந் தாலோ சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், காணாமல் போன கம்பூர் ஊர் பெயர்ப் பலகை சம்பந்தமாக காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக் கப்படும், இருதரப்பினரும் என்றும் அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு செய்தனர்.
ஆனால் இந்த நிலையிலும், எழுதப் படாத தீர்ப்பாக திருபாம்புரம் பகுதி மக்கள் கம்பூர் முஸ்லிம்கள் மீது தீண்டா மையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.கம்பூரை உள்ளடக்கிய குத்தாலம் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் அன்பழகனிடம் முஸ்லிம் ஜமாஅத் பெரியவர்கள் முறையிட சென்றபோது, என்னிடம் ஏன் வருகிறீர்கள், தமுமுக காரனிடம் போங்கள் என்று தெரிந்து எடுத்தெரிந்து பேசியுள்ளார். ஏறிய ஏணியை எட்டி உதைக்கிறார் இவர்.தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் ஜீவாதார உரிமை களை வழங்க நடவடிக்கை எடுக்கும் என மௌனமாக காத்துக் கொண்டிருக் கின்றனர் கம்பூர் முஸ்லிம்கள்.

Wednesday, October 15, 2008

இந்தியாவில் பட்டினி நிலைமை மிகவும் மோசம்

பட்டினி மற்றும் சத்துணவுப் பற்றாக்குறை பிரச்சினையைக் கையாள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ள போதிலும், நிலைமை இன்னும் மோசமாகவே இருப்பதாக உலக பட்டினி அட்டவணை விவரங்கள் தெரிவிக்கின்றன.
வாஷிங்டனை மையமாகக் கொண்ட சர்வதேச உணவுக் கொள்கை ஆய்வு நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அட்டவணையில், 88 நாடுகள் பட்டியலில் இந்தியா 66-வது இடத்திலும், இலங்கை 39-வது இடத்திலும் உள்ளன.
இந்தியாவைப் பொறுத்தவரை, கடந்த 1990-ம் ஆண்டு சுமார் 32 புள்ளிகளாக இருந்த பட்டினி விகிதம் தற்போது சுமார் 23 புள்ளிகளாகக் குறைந்துள்ளது. காங்கோ 42க்கும் மேற்பட்ட புள்ளிகளுடன், பட்டினியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக உள்ள நாடுகள் வரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இருபது முதல் 30 புள்ளிகள் வரை பெற்றுள்ள நாடுகளில், பட்டினி நிலவரம் அபாயகரமாக இருப்பதாக அந்த நிறுவனம் கூறுகிறது. அதன்படி, இந்தியா உள்பட 33 நாடுகள் அந்தப் பட்டியலில் இருக்கின்றன. இலங்கையைப் பொறுத்தவரை, 15 புள்ளிகள் மற்றுமே பெற்றிருப்பதால், அபாயகரமான நிலைமை உள்ள நாடுகள் வரிசையில் இடம் பெறவில்லை.
பட்டினி பெரும்பாலும் வறுமையுடன் தொடர்புடையதாக உள்ளதாகவும், பட்டினியால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் உள்ள நாடுகளில் அதிகமானவர்கள் குறைந்த மற்றும் குறைந்த நடுத்தர வருமானம் உள்ளவர்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவைப் பொறுத்தவரை, பட்டினியால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மத்தியப் பிரதேசம். அதையடுத்து, ஜார்க்கண்ட் மற்றும் பிகார் மாநிலங்கள் உள்ளன. பஞ்சாப் மற்றும் கேரள மாநிலங்களில் மிகக்குறைந்த பாதிப்பே உள்ளதாக ஆய்வு கூறுகிறது.
கலோரி பற்றாக்குறை மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்துடன், எடை குறைவான குழந்தைகளின் எண்ணிக்கையும் இந்தியாவில் பட்டினி அட்டவணையில் முக்கியப் பங்கு வகிக்கிறார்கள். தமிழ்நாடு, கேரளம் போன்ற சில மாநிலங்களில், கலோரி பற்றாக்குறையும், எடை குறைவான குழந்தைகளும் ஏறத்தாழ ஒரே அளவில் இருப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.

Saturday, October 11, 2008

தினமலரின் புதிய வாசகர்கள்...!


Sunday, September 21, 2008

பார்ப்பனரை வெறுப்பது ஏன்?குத்தூசி குருசாமி

(‘சுயமரியாதை’ இதழ் 1961-ல் வெளியிட்ட பொங்கல் மலரில் குத்தூசி குருசாமி எழுதிய மிகச் சிறந்த கட்டுரை இது)மகாபாரதத்தில் பீஷ்மர் யுதிஷ்ட்ரரைப் பார்த்துப் பின்வருமாறு சொல்கிறார்:-“கல்வியறிவுள்ள பிராமணர்களை வணங்குவது தான் மன்னனுடைய முதற் கடமை. ஒருவன் தன் உயிரையும், தன் குழந்தைகளின் உயிரையும் காப்பாற்றுவது போலவே பிராமணர்களைக் காப்பாற்ற வேண்டும். தன் பெற்றோர்களை வணங்கி மரியாதை செய்வது போலவே பிராமணர்களை வணங்கி மரியாதை செய்ய வேண்டும். பிராமணர்கள் திருப்தியோடிருந்தால் நாடு முழுவதுமே செழிப்போடிருக்கும்; பிராமணர்கள் கோபங் கொண்டாலோ, அதிருப்திப்பட்டாலோ, நாட்டிலுள்ள யாவுமே அழிந்து போய்விடும். பிராமணர்கள் நினைத்தால் கடவுளை கடவுளற்றதாகச் செய்து விடலாம்; கடவுளற்றதைக் கடவுளாக ஆக்கி விடலாம். அவர்களால் புகழப்படுகிறவர்கள் சிறந்து வாழ்வார்கள்; இகழப்படுகிறவர்கள் துன்பத்துக்காளாவார்கள்.”என்ன அருமையான உண்மை, பார்த்தீர்களா? மகாபாரதம் ஓர் முழுக் கற்பனை. இக்கதை நடைபெற்றதாகக் கூறப்படுவது ஏறத்தாழ 5,000 ஆண்டுகளுக்கு முன்னர்! ஆதலால் தான் கற்பனை! இதை முதன்முதல் வடமொழியில் எழுதியவர் வியாசர். இந்நூல் எழுதப்பட்டே ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கலாம். ஆனால், மேலே கண்ட வாக்கியங்கள் இன்றைக்கும் உண்மை. 100-க்கு 100 பங்கு உண்மை! உலகில் நிலைத்துவிட்ட அனுபவ உண்மைகளில் ‘பீஷ்மர்’ என்பவர் பெயரால் கூறப்படுகின்ற இந்தப் பொன்மொழியும் ஒன்றாகும். பார்ப்பனர் நினைத்தால், தங்களுக்குப் பயன்படும் மனிதனாகத் தோன்றினால் ஒரு சாதாரண நாலாந்தரப் போக்கிரியை ‘கிருஷ்ண பரமாத்மா’வாக ஆக்கியது போல், ஒரு சாதாரண மனிதனை ‘மகாத்மா’ ஆக்கி விடுவார்கள்; அதே ஆள் தங்களுக்கு இனிப் பயன்பட மாட்டான் என்று கருதினால் உடனே அதே ‘மகாத்மாவை’ சுட்டுக் கொன்று விடுவார்கள்! செத்த மகிழ்ச்சிக்காக மிட்டாய் வழங்கிக் குதூகலப்படுவார்கள்! திராவிட நரகாசூரனைக் கொலை செய்து அந்த நாளைக் கொண்டாட்ட (தீபாவளி) நாளாகச் செய்துவிட வில்லையா? அதுபோலத் தான். இப்போது இதைப் படியுங்கள்; இது காந்தியார் கொள்கை!“நான் பெரியவன் ஆகிவிட்ட பிறகு இந்தியாவிலும் தென் ஆப்பிரிக்காவிலும் பலர் நல்ல எண்ணத்தின் பேரிலேயே, நான் பூணூல் போட்டுக் கொள்ளும்படிச் செய்ய முயன்றார்கள். ஆனால், அவர்கள் முயற்சி வெற்றியடையவில்லை. சூத்திரர்கள் பூணூல் போட்டுக் கொள்ளக் கூடாது என்றால், மற்ற வருணத்தினருக்கு மட்டும் அதைப் போட்டுக் கொள்வதற்கு என்ன உரிமையிருந்தது என்று விவாதித்தேன். பூணூல் போட்டுக் கொள்வது அநாவசியமான பழக்கம் என்பது என் கருத்து. ஆகையால் அதை அணிய வேண்டும் என்பதற்குப் போதுமான நியாயம் இருப்பதாக (வைசியனான) எனக்குத் தோன்றவில்லை... இந்து மதமும் இந்தியாவும் இன்றுள்ள நிலைமையில் ஆன்மீகப் புனர் வாழ்வுக்குச் சின்னமான இந்தப் பூணூலை அணிந்து கொள்ளத் தங்களுக்கு உரிமையுண்டு என்று இந்தக்களால் காட்ட முடியுமா என்று சந்தேகப்படுகிறேன். இந்து மதத்திலிருந்து தீண்டாமை ஒழிந்து, உயர்வு-தாழ்வு என்ற வேற்றுமைகளெல்லாம் நீங்கி, அதில் இப்போது மலிந்து கிடக்கின்ற பல்வேறு தீமைகளும் வேஷங்களும் ஒழிந்த பிறகு தான் இந்துக்களுக்குப் பூணூல் அணியும் உரிமை ஏற்பட முடியும். ஆதலால் பூணூல் அணிந்து கொள்வது என்ற கருத்தையே என் மனம் வெறுக்கிறது” (பக்கம் 397 - சத்திய சோதனை-காந்தியார் சுயசரிதை-மொழிபெயர்ப்பு ரா.வெங்கட்ராஜலு).படித்தீர்களா? இப்போது சொல்லுங்கள். பூணூல் அணிவதை வெறுத்த காந்தியார் மராத்திப் பார்ப்பான் (கோட்சே) கையினால் சுட்டுக் கொல்லப்பட்டதில் தவறென்ன? வியப்பென்ன? அதிர்ச்சி என்ன? பீஷ்மரின் போதனையை மீண்டும் ஒரு தடவை படித்துப் பாருங்கள்! ஆம்! பார்ப்பனரை எதிரிகளாக்கிக் கொள்கிறவனுக்கு இராவணன் மரணம் தான்; இரணியன் முடிவுதான்; நரகாசுரன் சாவுதான்; காந்தியார் கதி தான்! சிவாஜியின் அரசாங்கம் அழிந்தது யாரால்? மராட்டியர் வரலாற்றைப் படித்துப் பார்த்தால் தெரியும்.சிவாஜி பார்ப்பன சூழ்நிலையிலேயே வளர்ந்தார். அரசாங்கத்திலும் ராஜ்யத்திலும் பார்ப்பனரே பெருகிக் கிடந்தனர். அவர் மன்னர் பதவி ஏற்றபோது இராணுவத்தளபதியைத் தவிர்த்து அவரது மந்திரிகள் அனைவரும் போர் வீரனான சிவாஜியை ‘க்ஷத்திரியன்’ ஆக்கினால் தான் அரசனாக முடியும் என்று கூறி, கற்பனைப் பரம்பரைக் கதை ஒன்றைத் திரித்து, அவருக்குப் பூணூல் அணிவித்தார்கள். நாடு முழுவதிலிருந்தும் 50,000 பார்ப்பனர் மனைவி மக்களோடு தருவிக்கப்பட்டு பவுனாகவும் உணவாகவும் வழங்கப்பட்டனர். தலைமைப் புரோகிதனான கங்குபட்டனுக்கு மட்டும் ஒரு லட்ச ரூபா பரிசு! பட்டஞ்சூட்டு விழாவின் மொத்தச் செலவு ஏழு கோடி ரூபாவாம்! இவ்வளவு பச்சைப் பார்ப்பன சிவாஜியின் அரசாங்கம்கூட நிலைத்திருக்க முடியவில்லை. அது ஒரு ‘இராமாயணம்’.மதத் துறையைத்தான் எடுத்துக் கொள்வோம். புத்தர் நெறி (பவுத்தம்) இந்து மதத்தை ஒழித்து விடும் என்பதைக் கண்ட பார்ப்பனர் பவுத்த சங்கத்திற்குள்ளேயே நுழைந்தனர். புத்தர் ஏமாந்தார். என்ன ஆயிற்று? அவர் வீட்டுக்குள் நுழைந்த நல்ல பாம்பு அவரது குழந்தையை (புத்த நெறியை)க் கடித்து நஞ்சை ஏற்றிக் கொன்றுவிட்டது. இன்று உலகத்திலுள்ள பவுத்தர் எண்ணிக்கை 15 கோடி! இதில் புத்தர் பிறந்த (இந்தியா) நாட்டிலுள்ளவர்கள் 2 (இரண்டே) லட்சம்! அதாவது 750-இல் ஒரு பங்குதான், இந்தியாவில்! போதுமா? இன்னும் வேண்டுமா?நாகசாகித் தீவில் விழுந்த அணுகுண்டின் நச்சுக் காற்று இருபதாண்டுகளுக்குப் பிறகுகூட இன்றும் அங்குள்ள மக்களுள் ஆபத்தான நோய்களை உண்டாக்கிக் கொண்டிருக்கிறதாம்! இந்தியாவில் 2,000 ஆண்டுகட்கு முன்பு விழுந்த ஆரிய அணுகுண்டின் நச்சுக் காற்றுத்தான் இன்றுள்ள சாதி! இன்றுள்ள நெற்றிக்கோடு! இன்றுள்ள சமஸ்கிருதம்! இன்றுள்ள கோவில்! இன்றுள்ள புராண-இதிகாசம்! இன்றுள்ள ‘பிராமண பக்தி!’ 'இந்து சமுதாயம்' என்பது அக்கிரகாரத்தின் கைப்பிடிக்குள் அடங்கியிருக்கின்ற மிளகாய்ப்பொடி! எதிர்த்தால் கண் போச்சு! எந்த அரசாங்கம் ஆரியக் கலாச்சாரத்தை - அதாவது ஆதிக்கத்தை - ஏற்றுக் கொள்கிறதோ, அந்த அரசாங்கத்தைத் தான் பார்ப்பன (நச்சுக்காற்று) சக்தி வாழவிடும்! இல்லையேல், அரசாங்க நிர்வாகத்துக்குள் புகுந்தே அழிந்துவிடும்! மூவேந்தர் ஆட்சி அழிந்ததும் இவ்வாறே.மந்திரிகள், உயர்தர அதிகாரிகள் போன்ற ஆதிக்க நாற்காலிகளில் அக்கிரகார சக்திக்கு இடமில்லையானால் வெளிநாட்டானை அழைத்து வந்தாவது அந்த ஆட்சியை அழித்தே தீரும். 31 ஆண்டுகள் இந்நாட்டில் பாதிரியாக இருந்து, நாடு முழுதும் சுற்றிய ‘அபேடுபாய்’ என்ற பிரெஞ்சுப் பாதிரியார் 160 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய தம் நூலில், “பார்ப்பனர் வடிகட்டிய அயோக்கியர்கள்; இரட்டை நாக்குப் படைத்தவர்கள்; எந்த ஈனச் செயலுக்கும் துணிந்தவர்கள்” என்றெல்லாம் அக்கிரகாரத்தின் மீது ‘லட்சார்ச்சனை’ செய்தாரே! அவருக்கு அன்றிருந்த துணிச்சலில் லட்சத்தில் ஒரு பங்கு கூட இன்றைய ‘வீரத் தமிழனுக்கு’ இல்லையே!இப்போது கூறுங்கள், பார்ப்பனரை வெறுப்பது சரியா? தப்பா?

Saturday, September 13, 2008

தமிழ் எழுத்துச் சீரமைப்பு!

கல்வியுகத்தில் எழுத்தறிவு
நாம் வாழ்வது கல்வியுகம்; நமது சமுதாயத்தை இன்று கல்வி அறிவுச் சமுதாயம் (Knowledge Society) என்று எல்லோரும் குறிப்பிடுகின்றனர். இன்றைய உலகில் சமுதாய வாழ்வில் கல்வியின் முக்கியத்துவத்தை விளக்கக் கீழ்காணும் இரண்டு சான்றுகள் போதும்:
- 1960 முதல் 1975 வரையிலான காலப் பகுதியில், உலகின் மொத்தப் பொருள் உற்பத்தி (GNP) இரட்டித்தது. இதன் பயன் எல்லா நாடுகட்கும் சமமாகச் செல்லவில்லை. ஏறத்தாழ 90 விழுக்காடு போல, எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இருந்த நாடுகட்குத்-தான் இந்த வளர்ச்சியின் பெரும் பகுதி சென்றது.
1965-இல் ஆரம்பக் கல்வி வளர்ச்சிக்கும், மொத்தப் பொருள் உற்பத்திக்கும் (GNP) இருக்கும் தொடர்புபற்றி, வளம் மிக்க 34 நாடு-களை எடுத்துக் கொண்டு ஆய்வு செய்யப்-பட்டது. இந்த ஆய்வுக்கு 1850 முதல் 1960 வரையிலான 110 ஆண்டுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டன. விதி விலக்கின்றி மேலே குறிப்பிட்ட நாடுகள் ஒவ்வொன்றிலும் எல்லோரும் ஆரம்பக் கல்வி பெற்ற நிலையை அடையுமுன் குறிப்பிடத்தக்க வளர்ச்சி ஏற்படவில்லை.
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக்
களரணையர் கல்லா தவர் (406)
என்பது வள்ளுவம். அதாவது விளைச்சல் எதுவும் தராத பொட்டல் வெளியில் போன்றவர் கல்லாதவர். அவர் இருந்தும் பயனில்லை என்று 2000 ஆண்டுகட்கு முன்பே வள்ளுவர் எழுதி வைத்தார். அவர் காலத்-தைவிட அது இன்று முற்றும் பொருந்தும். கல்விக்கு அடிப்படையானது மொழி. கல்வி உலகின் கருவூலம் முழுவதும் மொழியில் தான் இருக்கிறது. மொழியைக் கற்பதற்கு, ஒரு மொழியை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு முதல் படியாக தேவைப்படுவது அம்-மொழியின் எழுத்துகளைக் கற்பதாகும்.
-பண்டைக் காலத்தில் நூற்றுக்கு இரண்-டொருவரே கல்வி கற்றனர். ஒரு சமுதாயத்தில் மிகச் சிலர் மட்டுமே எழுத்துகளைக் கற்பதற்கு அதிக நேரம் செலவிடுவது மொத்தத்தில் பெரிய சமுதாய இழப்பன்று.
இன்றைய உலகில் அனைவருக்கும் கல்வி என்பது தலையாய குறிக்கோள். தலைமுறை, தலைமுறையாகக் குழந்தைகள் அனைவரும் எழுத்துகளைக் கற்பதற்கு நீண்ட காலம் செலவழிப்பது முடிந்தால் தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
-பண்டைக் காலத்தில் கல்வி என்பதே மொழிக் கல்வியாகத்தான் இருந்தது. ஆனால் இன்று பல அறிவு துறைகளைக் கற்பதற்கு மொழி ஒரு கருவி. நாம் மொழியை கற்பதற்கு மட்டும் அதிக நேரத்தை நமது முன்னோர்கள் போன்று செலவிட முடியாது.
-கல்வித் திட்டத்தில் மொழியைக் கற்பதை எளிதாக்குவது நமது முன்னேற்றப் பயணத்தின் முதல் தேவையாகும். அதற்கு எழுத்துகளைக் கற்பது எளிதாக்கப்பட வேண்டும். எளிதாக்கு-வது-தான் நாம் கூறும் சீர்திருத்ததின் நோக்கம்.
ஒரு விளக்கம்
தமிழ் எழுத்துச் சீரமைப்பை முன் வைக்கும் முன் இரண்டு தகவல்களை அறிவிப்பது முக்கியம்.
1. எழுத்துச் சீரமைப்பு என்பது தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 ஒலி எழுத்துகளில் ஒரு எழுத்தைக் கூடக் குறைப்பது அல்ல.
2. தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்துகளை எழுதுவதற்கு இப்பொழுது குழந்தைகள் 107 குறியீடுகளைக் கற்கிறார்கள். இந்த எண்ணிக்கையை 39 ஆக, அதாவது ஏறத்தாழ மூன்றில் ஒரு பங்காகக் குறைத்து, குழந்தைகளின் சுமையைக் கணிசமாகக் குறைப்பதுதான் நமது நோக்கம்.
தமிழ்ச் சாதி ஒரு குவலயக் குடும்பம்
வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுகம்
என்பது தொல்காப்பியம். அந்த நிலைமை மாறி வடக்கிலும், மேற்கிலும் தமிழக எல்லைகள் சுருங்கினாலும்,
இந்தியத் துணைக் கண்டத்தின்
எல்லைகள் கடந்து, பூமிப்
பந்திடை அமைந்த நாடு
பலவினும் பரவி வாழும்
ஒரு குவலயக் குடும்பமாகத் தமிழர் சாதி, 60-க்கு மேற்பட்ட நாடுகளில் வாழ்கிறது. தமிழர்கள் உலகு தழுவி வாழும் மொழிக் குடும்பம் என்பது நமது வலிமை. தமிழ் உலகு தழுவி வாழும் ஒரு மொழிக் குடும்பத்தின் தாய் மொழி என்பது அதன் பெருமை.
உலகமயமாகி வரும் இந்த யுகத்தில் ஒவ்வொரு இனமும் தனது அடையாளத்தைக் காத்து கொள்ள வேண்டும். தமிழர்கள் ஒரு மொழியினர்: பல நாட்டினர். இந்தியா உட்பட எல்லா நாட்டிலும் சிறுபான்மையினர். தன்னைக் காத்து கொள்வதற்கு ஆயுதம் இல்லாத சிறுபான்மையினம் காலப் போக்கில் அழிந்துவிடும்.
தமிழர்கட்கு நாடு அடையாளம் அன்று: மதம் அடையாளம் அன்று: அரசியல் கட்சி எதுவும் அடையாளம் அன்று: மொழி ஒன்று தான் அடையாளம்.
தமிழர்கள் தங்கள் மொழியைக் காப்பாற்ற வேண்டும், அதாவது தமிழர்கள் எங்கிருந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் தமிழ் கற்க வேண்டும்.
தமிழகம், இலங்கை, சிங்கப்பூர் தவிர்த்த அயலகத் தமிழர்கட்குத் தமிழ் ஒரு அரசியல் தேவையன்று, பொருளாதாரத் தேவையன்று. வாழும் நாடு எதுவாயினும் இன்று பரவலாக இடம் பெற்றுள்ள ஆங்கில மொழியின் 26 எழுத்துகட்கு அறிமுகமாகிவிட்ட தமிழ்க் குழந்தைகள், தமிழ் நெடுங்கணக்கில் உள்ள 247 எழுத்தைப் பார்த்து மலைத்து நிற்கிறார்கள். அந்த மலைப்பை நீக்குவது, அவர்கள் தமிழ் கற்க நாம் தவறாது செய்ய வேண்டிய உதவி. தமிழ் மொழிப் பாதுகாப்புக்கு நாம் செய்ய வேண்டிய கடமை. அவர்கள் 39 குறியீடுகளைக் கற்றால் போதும். அது அவர்களை அச்சுறுத்தாது. இனி எழுத்துச் சீரமைப்புக்கு வருவோம்.
தமிழ் நெடுங்கணக்கு
தமிழில் உள்ள ஒலி எழுத்துக்களை இருபெரும் பிரிவுகளாகப் பார்க்கலாம். ஒன்று முதன்மை எழுத்துகள்: அதாவது உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள், ஆயுதம் இரண்டாவது, சார்பு எழுத்துகள்: அதாவது உயிர் மெய் எழுத்துகள், அவை பின்வருமாறு:
முதன்மை எழுத்துகள்
அ. உயிர் எழுத்துகள் - 12
ஆ. மெய் எழுத்துகள் - 18
இ. ஆயுத எழுத்து 1 = 31
சார்பு எழுத்துகள்
உயிர்மெய் எழுத்துகள் 216
மொத்தம், ஒலி எழுத்துகள் ... 247
அகர முதல னகர இறுவாய்
எழுத்தெனப் படுவ முப்பஃது என்ப
என்று தான் தொல்காப்பியரும் கூறினார். தமிழ் வரிவடிவத்தை அதிக படுத்துவதே உயிர் மெய் எழுத்துகள் தான்.
அய்ரோப்பிய மொழிகளிலும், மத்திய ஆசிய மொழிகளிலும், உயிர் எழுத்துகள், மெய் எழுத்துகள் மட்டும் உள்ளன. இந்திய மொழிகளில் தான் உயிர் மெய் எழுத்துகள் என்ற தனி வரிவடிவங்களை கொண்ட மூன்றாவது பிரிவும் இருக்கிறது.
சார்பு எழுத்துகளாகிய உயிர் மெய் எழுத்துகளை எழுதுவதை எளிதாக்குவது தான் நாம் கூறும் எழுத்துச் சீரமைப்பின் நோக்கம். இந்த விளக்கத்துடன் தமிழ் நெடுங்கணக்கிற்கு வருவோம்.
முன்பக்க படத்தில் தமிழ் நெடுங்கணக்கும் அதை எழுவதற்குத் தேவைப்படும் குறியீடு களின் எண்ணிக்கையும் கொடுக்கப் பட்டுள்ளன.
இடது புறத்தில் முதல் செங்குத்து வரிசையில் க முதல் ன வரை 18 எழுத்து-களைக் கற்க வேண்டும்.
இரண்டாவது செங்குத்து வரிசையில் 18 எழுத்துகட்கு ஒரு உயிர்க் குறியீட்டை () மட்டும் கற்றால் போதுமானது.
வலது புறத்தில் எகர வரிசையில் கெ என்பதில் தொடங்கி மெய்யெழுத்து க் வரையிலான 7 செங்குத்து வரிசைகளில் உள்ள 126 எழுத்துகளைக் கற்பதற்குத் தேவைப்படுவன ஒற்றைக் கொம்பு (), இரட்டைக் கொம்பு (), சங்கிலிக் கொம்பு (), புள்ளி (.) ஆகிய நான்கு உயிர்க் குறியீடுகள் மட்டும் தான்.
ஆனால் மத்தியில் உயிர்மெய் இ - கரம், ஈ - காரம், உயிர்மெய் உ - கரம், ஊ - காரம் ஆகிய நான்கு செங்குத்து வரிசைகட்கு மட்டும், ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு தனி வடிவமாக 72 எழுத்துகட்கு 72 வரிவடிவங்கள் தேவைப்-படுகின்றன. இந்த 72 எழுத்துகளுக்கான தனி வரிவடிவங்களைக் குறைத்து அவற்றைக் கற்பதை எளிதாக்குவதுதான் இந்தச் சீரமைப்பின் நோக்கம்./டாக்டர் வா.செ.குழந்தைசாமி

சிறுகதை:மனித மந்தை _ அறிஞர் அண்ணா

மந்தை மந்தையாக ஆடுகள் மிரண்டோடின -- யாரும் விரட்ட-வில்லை - இருந்தாலும், சிதறி-யோடின, அந்த செம்மறி ஆடுகள்!
அதோ, கண்களில் செந்தீ கொழுந்து விட்டெரிய ஓடி வருகிறாள், ஒரு பெண் - ஆம், அவள்தான் மந்தைவெளி மாரி-யம்மன்!
மாரியம்மன், ஊரிலே கொள்ளை நோய் கொடுப்பவள்- கொடுமை புரிபவளுக்குக்கூட கோயில், அவளுக்கும் தெய்வப்-பட்டம், படையல், பூசை, விழா எல்லாம் உண்டு - பக்தியே, பயந்-தாங் குள்ளிகளின் மூளையி-லேதானே உற்பத்தி!
ஒரு மூளியான கோயில், அதற்கு முன்னால் மூர்க்க புத்தி படைத்த ஒரு கூட்டம் - அவர்களுக்கிடையே இரண்டு ஆடுகள், குளுப்பாட்டி, மஞ்சள் பூசி, மாலையிட்டு நிறுத்தியிருந்தார்கள்.
ஓடிவந்தாள் மந்தைவெளி அம்மன் உரக்கக் கூவினாள்.
வெட்டாதீர்கள் ஆடுகளை வெட்டினால், வைசூரி போட்டு ஊரையே அழித்துவிடுவேன் நீங்களாடா, என் பக்தர்கள் - நீங்கள் மகா பாதகர்கள்! என் பெயரே மந்தைவெளி அம்மன் இந்த மந்தைகளைக் காப்பது என் கடமை. நீங்களே, இரண்டு ஆடுகளைக் கொண்டு வந்து எனக்கு வெட்ட வந்து விட்டீர்களே, துட்டர்களே! எனக்குப் படைக்க நீங்கள் யார்? என் பசி போக்கிக் கொள்ள எனக்குச் சக்தியில்லையா? ஆடு வேண்டுமானால், எனக்கு எடுத்துக் கொள்ளத் தெரியாதா?
தாயே, இப்படிப் பேசலாமா? கொஞ்ச நேரத்திற்கு முன்னாலே, இந்தத் தறுதலை அப்படித்தான் சொன்னான் - அவனையே வெட்டி விடுவோம் என்று மிரட்டினோம் - அடங்கிவிட்டான், அறிவு கெட்டவன்.
அவனுக்கு அறிவு கெடவில்லை. உங்கள் புத்திதான் சரியில்லை. என்னைத் தெய்வம் என்று நம்புவது உண்மையானால், சகல சக்திகளும் உண்டெனக்கு என்று ஒப்புக் கொள்வது உண்மையானால் எனக்கு நான் படைத்த உயிரையே பலியிடத் துணிவீர்களா?
மாதா, அதுதானே வழக்கம்!
வழக்கம் என்று சொல்லி எங்கள் கடவுள் குலத்தையே இன்று காட்டிக் கொடுத்துவிட்டீர்கள்! கணக்கற்ற கடவுள்களைச் சொல்லி, ஆளுக்கு குடும்பம் ஏற்படுத்தி கோயில்கள் பல கட்டி, திருவிழா, படையல், வாண-வேடிக்கை செய்து, எல்லாம் வெறும் பொம்மை விளையாட்டு என்று காட்டிவிட்டீர்கள்.
மந்தைவெளி அம்மன், காவு கொடுக்கவந்த ஆடுகளை விரட்டி விட்டாள். அந்த ஆடுகள் ஓடுமுன் அங்குக் கூடியிருந்த மனித மந்தை சிதறியோடிவிட்டது.
அம்மன் அருளைப் பெற தெய்வப்படைப்பில் ஓர் உயிரைப் பலியிடுவது என்ன நியாயம்? கருணையில்லாதது ஒரு புறமிருக்கட்டும்; கருத்தில்லையே! உணவுப் பொருளாக உட்கொள்கிறார்கள் அர்த்தமிருக்கிறது. ஆடு வெட்டுவதும், கோழி அறுப்பதும் எவ்வுளவு பைத்தியக்காரத்தனம்!
மனித அறிவு வளராத காலத்தில் மனிதன், முழுமனிதன் ஆகாத நேரத்தில், காட்டுமிராண்டி காலத்தில் வெட்டினான் - வீழ்த்தினான் இரத்தத் துளி-களைத் தெளித்து தனது முரட்டுப் பக்தியை தீர்த்துக் கொண்டான்.
இந்தக் காலத்திலும் அது ஆகுமா? ஆடு கேட்கிற சாமியும் ஒரு சாமியா? அது கசாப்புக்கடைக்குப் போகட்டுமே என்று இப்படித்தான் கூறி அவன் தடுத்தான் அவனை ஆதரித்தோர் மிகச் சிலர்! வைரங்கள் அதிகமில்லாததால் அதன் மதிப்பு குறைந்தா விடுகிறது - மணல் நிறைந்துதானிருக்கிறது - யார் சட்டை செய்கிறார்கள்.
அந்த மனித மந்தை அவனை எப்படி பயமுறுத்திவிட்டது!
இந்தப் பூலோகத்திலிருப்-பதைவிட, நாமெல்லாம் கூண்-டோடு நம்ம லோகம் போய்விட வேண்டியது-தானே! இந்தியாவில் மட்டுந்-தான், நம்மவர் இன்னமும் இருக்கிறார்கள் - வெளியுலகில் எவ்வளவோ கடவுள் குடும்பங்கள், ஊரை-விட்டே ஓடிவிட்டன - சில நாடு கடத்தப்பட்டன அவைகளெல்லாம் மாஜிகளாகிவிட்டன.
தார், ஒடின் போன்ற தெய்வங்கள் எங்கு போய் மறைந்தன என்றே தெரியவில்லை. ஆனால், இங்கு மட்டும் மாரி, காளி, திரிசூலி, முத்தாலு ராவுத்தன், முனியன், சங்கிலிக்கருப்பன் வரையில் ஒருவர்கூட விடாமல் வாழ்-கிறார்கள்.
என்னைப் பொறுத்த-மட்டில் நான் மனித உலகை-விட்டே போய்விடுவதென்று முடிவிற்கே வந்து விட்டேன்.
எனக்குக் கொடுத்த வேலை, ஊரை நோயால் வாட்டல் - இதைச் செய்யும் என்னையும் இந்த மக்கள் விட்டு வைத்திருக்-கிறார்-கள்! ஆனால், அதிக நாள் நீடிக்க முடியாது.
அம்மை பரவுகிறது என்றாலே, ஊசி போட வந்து விடுகிறார்கள் இப்பொழுது - என் சக்திக்கு எங்கே மதிப்பு! என் பக்திமான்-களுக்கு, புத்திதான் இல்லை என்றால் தைரியமும் இல்லை. என்னை நம்புவது போல, அவர்களை எதிர்க்கிறார்களா என்றால் இல்லை. ஓடி ஒளிந்து விடுகிறார்கள். நான் என்ன செய்யட்டும்? நான் போய்விடுகிறேன், எங்கள் லோகத்திற்கு!
எனக்கு ஆடு வெட்டுகிறான்-களாம் என்ன கோரம்! இதைத் தடுத்தவர்க-ளெல்லாம் எனக்கு விரோதி-களாம் என்ன மதியீனம்! இப்-பொழுதே, இந்தத் கோயில் கர்த்தா, கோணங்கிப் பிள்ளையைக் கேட்கிறேன்.
படுத்திருந்த பூசாரி, போகலிங்கம் திடுக்-கிட்டு எழுந்தான். ஏதோ, கோயிலுக்குள்ளே முணுமுணுப்பு சத்தம் கேட்கிறதே என்று! மந்தைவெளி அம்மன், தனக்குத்தானே பேசியபடி வெளியில் கிளம்புவதைக் கண்டு திடுக்கிட்டான்.
தாயே
தடுத்தால், ஆபத்து - விலகடா, வீணா. . .
எங்கே, அம்மையே. . .
ஊர்ப்பயணம் சொல்லிக் கொள்ள. . . கோணங்கிப் பிள்ளையிடம். . மந்தை வெளியம்மன் நடந்து விட்டாள். பூசாரி கால் விடவிடென நடுங்க, அவள் போன திசையிலே அடியெடுத்து வைக்க முயற்சி செய்ய, முடியவில்லை. ஆகவே, அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
அடே, பரமபாதகா, படுபாவி - நீ என் பக்தனா சீறினாள் அம்மன்.
ஆடு வெட்டுவது தவறு என்று நான் சொன்னேன் என்றாள் தேவி.
அந்தப் பயல்களோடு நீங்க சொல்லியும் நாலு ஆடுகளாக வெட்டிவிட்டேன்.
கொலைகாரா!
காவு கொடுத்தேன் - கொலை செய்யலீங்களே.
அது மட்டுமா? பொய் சொல்லியிருக்கிறாய் - இல்லை, அதற்குமேலே, எனக்கு சக்தியில்லை-யென்று ஊராருக்குச் சொல்லிவிட்டாய்!
என் கோயிலிலிருந்து என் சிலையைப் பண்ணையாளை விட்டுத் தூக்கிக்கொண்டு போனாய்!
அட, அதுவா? அந்தக் காலிப்பயல்களைப் போலீசிலே சிக்கவைக்க
என்னை ஒரு பொம்மையென்று நினைத்-துக்கொண்டு பொய் சொன்னாய்!
இல். . . லீ. . . எனக்குச் சக்தியிருக்கிறதென்றால் என்னிட-மல்லவா சொல்லியிருப்பாய் - போலீசுக்குப்-போய், பொய் வழக்கு கொடுத்திருக்க-மாட்டாயே!
அப்படியில்லை தாயே அக்கிரமக்கார பசங்-களைத் தண்டிக்க வேண்டாமா?
தண்டிக்க நீ யார்? அம்மன் நானிருக்க, மனிதன் நீ எப்படி முயற்சி செய்தாய்? அதுவும் அவன் தப்பு செய்யவில்லையே, நல்லதைத்தான் சொன்னான்.
உங்களுக்கு பலிகொடுக்கக் கூடாதென்று...
எனக்கு பழிவரக்கூடாது என்ற நல்லெண்ணத்-தில் சொன்னான் - தடுத்தான்!
கோணங்கிப் பிள்ளை தலை சுழல ஆரம்-பித்துவிட்டது. அவருக்கு எதுவும் புரிய-வில்லை.
கோணங்கி, உன் போன்ற கோணங்கி பக்தர்களல் எங்கள் மானம் காற்றிலே பறக்க விடப்படுகிறது - இனி நாங்கள் இங்கு இருக்க முடியாத அளவு நிலைமை வந்துவிட்டது. எல்லாம் பக்தர்கள் என்ற பெயரால் உலவும் உங்கள் செயல்களால் அவர்களால் அல்ல! ஆகவே நான் போகிறேன். இனி மந்தைவெளி இருக்கும் - அங்கு உங்கள் மனித மந்தைதான் கூடிக்கும்மாளம் போடவேண்டும். அம்மன் இருக்கமாட்டாள் என்று கூறிவிட்டது போய்-விட்டாள்!. . . கோணங்கிப் பிள்ளை கண் விழித்துப் பார்த்தார். இத்தனைக் காட்சிகளும் கனவில் கண்டவை என்று அப்பொழுதுதான் புரிந் கொண்டார்.
எதிரில், எவருக்கும் தெரியாமல், எடுத்து வந்த அம்மன் சிலை இருந்தது - அது அவரைப் பார்த்துக் கேலியாகச் சிரித்தது.
அந்த ஊரிலே பரவி வந்த பகுத்தறிவுப் பிரச்-சாரத்தைக் தடுக்க அவரிட்ட சதித் திட்டம் - பகுத்தறிவு இயக்கத்தைத் சேர்ந்தோர் மீது கோயில் சிலையைக் களவாடினார்கள் என்று வழக்குக் கொடுத்து விடலாம் என்பது - பண்ணையாளே பகுத்தறிவு இயக்க பரமசிவமும், பார்த்திபனும் திருடியதாக ஊரிலே கூறவேண்டும் என்று சொல்லிக் கொடுத்தார். பூசாரி போகலிங்கத்திற்கும் அதே உத்தரவு - ஆனால், பொழுது விடிவதற்குள்ளே சிலையைத் தூக்கிப் போன பண்ணையாளே, உண்மையை ஊர் முழுவதும் சொல்லிவிட்டான்.
கனவிலே கண்ட காட்சியின் நினைப்பு முடிவதற்குள்ளே, ஊர் மக்களின் கூட்டம் வீட்டு எதிரில் கூடியிருப்பதைக் கண்டார் - கலங்கினார். அவருக்கு இப்பொழுது பயம் வந்ததற்குக் காரணம், கூடியிருப்பது மனித மந்தையல்ல, மக்கள் மன்றம் என்பது தெரியும்

தனியார்த் துறைகளில் இடஒதுக்கீடு கிடையாதாம்!

தனியார் துறைகளிலும் இட ஒதுக்கீடு என்கிற திட்டத்தை மய்ய அரசு கைவிட்டு விட்டதாகச் செய்திகள் வருகின்றன. தொழில் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் தொடங்கி, அப்பகுதி மக்களுக்கு, வேலை வாய்ப்பு அளித்திட வேண்டும் எனும் அரசின் யோசனையைத் தொழிலதிபர்கள் வட்டாரம் அதிர்ச்சி யுடன்தான் அணுகியது.தனியார்த் துறைகளிலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப் பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என கேரள எம்.பி. ஒருவர் தனி நபர் மசோதா கொடுத்தபோது, அரசே சட்டம் கொண்டு வரத் திட்டம் வைத்திருக்கிறது என இரண்டு முறை உறுதி கூறி அதனைத் திரும்பப் பெறச் செய்தார் மீரா குமார் எனும் மய்ய அமைச்சர்.சட்டம் கொண்டுவர முயன்றபோது தாழ்த்தப்பட் டோர்க்கு மட்டும் என்று அது கரைந்து போனது. நாடாளுமன்றத்தில் வாதம் நடந்தபோது அதுவும் இல்லாமல் ஆகி, தொழில் முதலாளிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களைச் சம்மதிக்க வைத்திட குழு அமைக்கப்பட்டது (தேய்ந்து தேய்ந்து கட்டெறும்பான கதைதான்).இப்போது அந்தக்குழு, தொழிலதிபர்களைக் கவர்ந்திழுக்க இயலாமல் திட்டத்தைக் கைகழுவி விட்டது.தாழ்த்தப்பட்டோருக்கும் பழங்குடியினர்க்கும் வேலை வாய்ப்புகளை அளித்திட, உற்பத்தியில் ஈடுபடும் தொழிற் சாலைகள் முன்வருமேயானால், சமூகப் பொருளாதார அடிப்படையில் முன்னேற்றிட முடியும். இந்த வாதத்தை குழுவில் இருப்பவர்களாலேயே ஏற்க முடியவில்லை. தொழில் முதலாளிகளுக்குப் பலவிதச் சலுகைகள் தந்து கொண்டிருந்த நிலைபோய் குறைந்த பட்ச செயல்திட்டத்தில் உறுதி அளிக்கப்பட்ட இட ஒதுக்கீடு முழுவலம் வந்து நின்று விட்டது. தொழில் நிறுவனங்கள் பிரதமருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் தெரிவிக்கப்பட்ட கருத்து இதுதான்.இட ஒதுக்கீடு அளிப்பதென்பது தொழில் வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கும் என்பதும் அரசமைப்புச் சட்டத்தில் இருக்கும் தடைகளும் இட ஒதுக்கீட்டைத் தூரத்திலேயே வைக்கிறது. அதனை ஆதரித்துப் பேசுவது, தனியார் முதலாளிகளிடம் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்துகிறது.இத்தகைய மாற்றத்தை இட ஒதுக்கீடை ஆதரிப்போர் மகிழ்ச்சியடையவில்லை. வளர்ச்சி பெறாத பகுதிகளுக்குத் தொழில்களை அனுப்புவதென்பது ஏற்கெனவே சரியான பலனைத் தராதத் திட்டத்தைப் புதுப்பிப்பதுதான் என்றே அவர்கள் கருதுகின்றனர்.தொழில் கொள்கை, வளர்ச்சிக்கான துறையைச் சேர்ந்த அலுவலர்களின் குழு ஒன்று அமைக்கப்படுமென்று தெரி கிறது. சமூக நீதித்துறையிலிருந்து இட ஒதுக்கீடு பிரச்சினையை ஏற்றுக்கொண்டிருக்கும் பிரதமரின் குழு முதன்மைச் செயலாளர் டி.ஏ.கே. நாயர் தலைமையில் இருக்கிறது. இத் துடன் தொடர்பு கொண்டிருக்கும் அலுவலகமாக தொழில் கொள்கை, வளர்ச்சித் துறை விளங்குகிறது. இதன் செயல் பாடுகளின் மூலம் தெரியவருவது என்னவென்றால், இட ஒதுக்கீடு மோசமான அரசின் கவனத்திலிருந்து அகன்று விட்டது என்பதுதான் என டைம்ஸ் ஆப் இந்தியா ஏடு செய்தி வெளியிட்டுள்ளது (11-9-2008). ஏட்டின் எண்ணம் செய்தியாக வெளியிடப்பட்டிருக்கலாம்.எப்படியிருந்தாலும் தனியார்த்துறையில் பிற்படுத்தப்பட் டோர்க்கு இடஒதுக்கீடு எனும் நிலையிலிருந்து பின் வாங்கிய மய்ய அரசு, தற்போது தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர்க் கும் கிடையாது எனக் கைவிரித்துவிட்டது என்றே தோன் றுகிறது. சமூகநீதி வேண்டுவோர் கவலையுடன் அணுகவேண்டிய செய்தியாக அமைந்துள்ளது என்னவோ உண்மைதான்

Friday, September 12, 2008

இந்துக்களுக்கு எதிரானவற்றை வன்முறை மூலமாகவே முறியடிப்பார்களாம்!

இந்துக்களுக்கு எதிராக நடத்தப்படும் வன் முறைகளுக்கு, எதிர் வன்முறை மூலமாக பதிலடி தருவோம் என்று விசுவ இந்து பரிசத் அமைப்பின் பொதுச் செய லாளர் பிரவீண் தொகாடியா கூறியுள்ளார்.ஒரிசாவில் கிறிஸ்தவர்க ளுக்கு எதிராக நடைபெற்ற வன்முறைகளுக்கு இந்து அமைப்புகள்தான் காரணம் என்ற குற்றச்சாற்று எழுந் துள்ள நிலையில், இவ்வாறு மேலும் வன்முறையைத் தூண் டும் வகையில் அவர் பேசியி ருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த வன்முறையாளர்கள் இந்து சமுதாயத்தில் ஒரு பிரிவினர் மீது வன்முறைத் தாக்குதல் களை மேற்கொண்டால் அதற்கு இந்துக்கள் தரப்பில் தரப்படும் பதிலடியும் வன் முறையாகவே இருக்கும். ஒரி சாவில் கிறிஸ்தவ அமைப்புகள் மீது நடத்தப்படும் தாக்குதல் களுக்கு இந்துக்கள் எந்த வகையிலும் காரணம் அல்ல. அதே நேரத்தில் இந்துக்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. அத்தாக் குதல்களுக்கு பதிலடி தரும் உரிமை இந்துக்களுக்கு உண்டு என்று அவர் கூறினார்.விசுவ இந்து பரிசத்தின் லட்சுமணானந்தா மாவோயிஸ் டுகளால் கொலை செய்யப்பட் டார் என்று கூறப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இக்கொலைக்குக் அவர்களுக் கும் எந்தத் தொடர்பும் இல்லை. அவர் கொலை செய் யப்பட்டதற்கு கிறுஸ்தவ அமைப்புகள்தான் காரணம். இந்த அமைப்புகளைப் பாது காக்கவே இது போன்ற தவ றான செய்திகளை ஒரிசா அரசு வெளியிட்டு வருகிறது என்று அவர் குற்றம் சாற்றினார்.இக்கொலையை கிறிஸ்தவ அமைப்பினர் செய்தனர் என் பதை எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள்? என்று கேட்ட போது, இக் கொலையில் கிடைத்துள்ள சாட்சியங்கள் அனைத்தும் கிறிஸ்தவர் களுக்கு எதிரானதாகவே உள் ளன. மாவோயிசத் தீவிரவாதி களுக்கும் எங்களுக்கும் இடையே எந்த வித மோதலும் கிடையாது. இந்தப் படு கொலையில் இது வரை கைது செய்யப்பட்டுள்ளவர்கள் அனைவருமே கிறிஸ்தவர்கள் தான் என்று தொகாடியா கூறினார்

Sunday, September 7, 2008

"தமிழர் வரலாறு தமிழ்தான்"பேரா. பர்வீன் சுல்தானா

எழுத்தாளர்களின் சமூகக் கடமை கள் என்ற கருத்தரங்கத்தில் பெண்ணியல் நோக்கில் என்ற தலைப்பில் முனைவர் பர்வீன் சுல்தானா அவர்கள் பேசிய உரை யில் உலகெங்கும் விரவிக் கிடக்கும் தமிழர் களுக்கான அடையாளம் தமிழ் மொழி தான் நமது வாழ்வியல் நெறி நம்மை விட்டு பறிக்கப்பட்டு விடக் கூடாது. உல கத் தமிழர் பேரமைப்பின் மாநாட்டுக்கான அடிபடையும் அதுவே என்றார். உயிரைத் தக்க வைத்துக் கொள்வதற்காக புலம் பெயர்ந்தாலும்- அது போர் காரண மாகவோ அறிவியல் காரணமாகவோ ஆனாலும் - நம் மண்ணை விட்டு அப் புறப்படுத்துவதாகவும் - இதற்காகக் குரல் கொடுக்க இளைஞர்கள் வராததற்குக் காரணம் ஈழத்தில் 28 ஆண்டுகளாக நடை பெறும் போர் என்று கூறினார். தலை முறையைக் காப்பாற்ற அவர்கள் புலம் பெயர்ந்து போவதைச் சுட்டிக்காட்டி புலம் பெயர்ந்து செல்வதால் தலைமுறைக்கான அடையாளத்தை இழக்கும் ஆபத்து ஏற் பட்டுள்ளது. தலைமுறையைக் காப்பாற்றும் முயற்சியாகத் தான் பேரமைப்பின் மாநாட்டு கூட்டமர்வுகளை தான் நோக்கு வதாகவும், பேரமைப்பின் மாநாட்டில் வரு கின்ற கட்டுரைகள் -எடுக்கக்கூடிய தீர் மானங்கள் - அவற்றைச் செயல்படுத்தும் முறைகள் எல்லாம் இந்த முயற்சியை நோக்கித் தான் செல்கின்றன என்றும் கூறினார்.தான் ஒடுக்கப்பட்டோம் என்பதை ஒரு சமுதாயம் உணரும் போது தான் புரட்சி வெடிக்கிறது. அப்போது ஒடுக்கப் பட்டவர்கள் ஆதிக்க சக்திகளுக்குச் சவாலாக மாறுகிறார்கள். எந்த ஒரு புரட்சி யும் மொழியில் தான் துவங்குகிறது என உலக வரலாறு எடுத்துக்காட்டுகிறது. மொழி என்பது பாதுகாக்கப்பட வேண்டும். எந்தச் சமுதாயம் மொழியைத் தக்க வைத்துக் கொள்கிறதோ அந்த சமுதாயத்தால் தான் ஆதிக்கச் சக்திகளை எதிர்த்து நிற்க முடியும். மொழியை நாம் கைவிட்டு விட்டால் அந்த இனத்திற்கு வரலாறு கிடையாது, தமிழர்களுக்கு என்று தனி வரலாறு கிடையாது. தமிழ் வரலாறு தான் தமிழர் வரலாறாகப் பரிணமிக்கிறது. மொழி தான் ஆயுதம் என்பதால் அது சிறப்பான முறையில் பேணப்பட வேண்டும்.தமிழர்களுக்கு என்று தனி வரலாறு கிடையாது. தமிழ் தான் வரலாறு. தமிழ் வரலாறு தான் தமிழர் வரலாறு. தமிழ் மொழி செம்மொழியாக இருப்பதற்குக் காரணம் அந்த தமிழிலே நாம் செம்மாந்து இருப்பதற்குக் காரணம் அந்த இலக்கியங் கள் தான். அந்த எழுத்துகள் தான், நாம் கையில் எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய இந்த ஆயுதம் தமிழ் மொழி. இது மிகக் கூர்மையாக இல்லாமல் போனால் நாம் தலைமுறைக்குத் தவறு செய்தவர்களாக ஆகி விடுகிறோம், ஒரு நாட்டின் விடுதலை என்பதே அந்த நாட்டு தலைமுறையைக் காப்பதற்குத்தான்.தமிழர்கள் எதற்காகச் சீன நாட்டை கவனிக்க வேண்டும் என்றால்- தன் அடையாளத்தைத் தொலைக்காமல் நாம் போராடுகிறோம். ஆனால் அடிபணி கிறோம். அவர்களும் போராடுகிறார்கள். ஆனால் அடிபணிவது இல்லை. இந்த சீனர்களை நம்ப முடியாது என்ற ஒற்றைச் சொல் அந்த மலேசிய நாட்டின் வரலாற் றையே புரட்டிப் போட்டு விட்டது. ஒரு இனத்தை எதிர்த்து ஒரு பிரதமர் பேசிய ஒரு சொல் அந்த பிரதமரையே இடம் மாற் றச் செய்யக் கூடிய அளவுக்கு இருந்தது என்பது மலேசிய வரலாறு. மலேசியா விற்கு நான் சென்றிருந்த போது பார்த் தேன். மீன் விற்கக் கூடிய ஒரு பெண் சீன மொழியில் பேசினால் இரண்டு காசுகள் குறைத்துக் கொடுக்கிறாள். ஏன் என்றால் அவளுக்கு அவள் மொழி மீது அவ்வளவு காதல். நீங்கள் அந்த மொழி யில் பேசினால் பொருளாதார இழப்பைக் கூட அவள் பொருட்படுத்தவில்லை. வாசிக்கவே தெரியாத சீனன் கூட தினசரிப் பத்திகையை வாங்கி தேனீர் கடையில் வைத்து விட்டுப் போவான். அவன் மறந்து விட்டு போகிறான் என்று யாரும் நினைப் பதில்லை. ஏன் என்றால் எல்லோருக்கும் தெரியும் அவன் வேண்டும் என்று தான் வைத்து விட்டுப் போகிறான். வாசிக்கத் தெரிந்தவர்கள் வந்து வாசித்து விட்டுப் போகட்டும் என்ற உயர்வான எண்ணம். மொழியின் மீது அவர்களின் ஈடுபாடு அப்படி உள்ளது.மதிப்பீடுகையில் மாற்றங்களைக் கொண்டு வராமல் உலகத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர முடியாது மதிப் பீட்டை வளர்ப்பதற்காக சிறுவர்களுக்கான காக்கா கதை தமிழ் மக்களிடையேயும் சீன மக்களிடையேயும் எவ்வாறு வெவ்வேறு கோணங்களில் சொல்லப்படுகிறது என சிறு கதைகளுடன் விளக்கினார். தமிழ் மக்கள் எங்கிருந்தாலும் அவர்களிடையே சொல்லப்படும் கதைகாக்கா ஒன்று இருந்ததாம். காக்காவுக்குப் பசித்ததாம். அது போய் பாட்டி வைத்திருந்த வடையைத் திருடி யதாம். திருடிய காக்கா மரத்தின் மேல் போய் உட்கார்ந்தது. நரி ஒன்று வந்தது. நீ அழகாக இருக்கிறாய். நன்றாகப் பாடுவாய் என்று சொன்னார்கள் என்று பொய் சொன்னது. பசி - திருட்டு - பொய். காக்கா ஏமாந்து விட்டது. நரி ஏமாற்றி விட்டது. பசி - திருட்டு - பொய் - ஏமாற்றுவது - ஏமாந்து போவது. இதே மதிப்பீட்டுக்கான கதை சீன நாட்டில் எப்படி சொல்லப்படுகிறது காக்கா ஒன்று இருந்ததாம். அதற் குப் பசித்ததாம். பாட்டியிடம் போய் பசிக் கிறது. வடை ஒன்று கொடு என்று கேட்ட தாம். பாட்டி "இரு காக்கா. ஈர விறகிலே சுட முடியவில்லை. சுட்டவுடன் தருகி றேன்" என்று சொன்னதாம். உடனே நமக்கு வடை தருகிறேன் என்று சொன்ன இந்தப் பாட்டிக்கு நாம் உதவி செய்யலாமே என்று காக்கா எண்ணியதாம். கூடு கட்ட நமக்குத் தெரியுமே என்று யோசித்து காய்ந்த குச்சிகளைக் கொண்டு வந்து போட்டதாம். இவ்வாறு முதலில் அந்த குழந்தைக்கு அறிமுகப்படுத்துகிறார்கள் உழைப்பை. பாட்டி வடை சுடுகிறாள். சுட்ட ஜோரில் காக்காவை மறந்து விடுகிறாள். சொல்லித் தருகிறார்கள் தொழி லாளர் உரிமையை. காக்கா பாட்டியைப் பார்த்து கேட்கிறது. "ஏய் பாட்டி, முதலில் நான் கேட்டது பிச்சை. இப்பொழுது நான் கேட்பது நான் உழைத்த உழைப்புக்கு கூலி" கொடு; என்று கேட்டது. வடையை -அந் தக் கூலியை வாங்கிக் கொண்டு பறக்கிறது அந்த காக்கை. புகழ்ச்சியில் மயங்காதவர் யாருமே இல்லை. புகழ் என்பது கொஞ்சம் மயக்கத் தான் செய்யும். அப்படி மயங்கா மல் இருப்பது தான் கெட்டிக்காரனின் அடையாளம். தொழிலாளர்கள் தானே. மயங்கத் தானே செய்வார்கள். உட்கார்ந் திருந்த காக்கையிடம் நரி வந்தது. காக்கா காக்கா நீ அழகா இருக்கியே நல்லா பாடு வாயாமே என்று புகழ் வார்த்தை சொன் னது நரி. ஒரு வினாடி மயங்கியது காக்கை. வாயிலிருந்து விழுந்தது வடை. தொழி லாளர் பலவீனத்தால் விழுந்தது வடை. உடனே அந்த காக்கை சுதாரித்துக் கொண் டதாம். அடே நான் உழைத்த உழைப்பை இன்னொருவன் திருடுவதா என்று எண்ணி அந்த காக்கை கா கா என்று கதறியது. அந்த கதறலுக்கு ஓராயிரம் காக்கைகள் கூடின. அந்த நாட்டில் கதையை இப்படி முடிக்கிறார்கள். சிறு குழந்தைக்குச் சொல்லும் கதை தான். கதையை எப்படி முடிக்கிறார்கள் தெரியுமா? அந்த காட்டில் அந்த காக்கைக்கு இழந்த ஒரு வடை மட்டுமல்ல - ஓராயிரம் காக்கைகளுக்கு ஏமாற்றிய நரி உணவானது என்று முடிக் கிறார்கள். இதற்குப் பெயர் மதிப்பீடு. பெண்ணியம் பற்றி பேசுவதில் சாதாரணமா தனக்கு உடன்பாடு கிடையாது. தமிழ்ப் பெண்களிடையே குடும்ப நிறு வனத்தில் ஈடுபாடு இருக்கும். மேற்கத்திய கலாச்சாரத்தில் பேசப்படுகிற பெண்ணியம் என்பதில் அது தகர்க்கப்படும். அதில் உடன்பாடு கிடையாது.பெண் விடுதலையைப் பேசு வோமே தவிர பெண்ணியம் பேசுவது கிடையாது. பெண்ணியம் என்பது குடும்ப நிறுவனத்தைத் தகர்க்கும் ஒரு விடயமாக தனது கண்ணில் படுகின்ற காரணத்தினால் குடும்ப நிறுவனத்தைத் தகர்த்து தலை முறையை - அவர்களுடைய அடை யாளத்தை பறிக்கக் கூடிய எந்த விடயத்தையும் தமிழ்ச் சமுதாயம் ஏற்காது.பெண்களுக்குச் சார்பாகப் பேசக் கூடிய அத்தனை விடயங்களும் ஆண் களுக்கு எதிரானதாகக் கருதப்படுவதா கவும் அதே நேரத்தில் பெண்களின் குறைகளைச் சுட்டிக் காட்டிப் பேசக் கூடிய பேச்சுகள் ஒட்டுமொத்த பெண் விடு தலையை-புரிந்துணர்வை பாதிக்கும் என்ற விழிப்புணர்வு எழுத்தாளர்களுக்கு இல்லாமல் போகிறது.ஒன்று - பெண்ணின் விடுதலை யைப் பற்றிப் பேசுவதும் பெண்ணைப் பற்றி ஆதரவான கருத்துகளைக் கூறுவதும் - பெண்ணினத்திற்கான ஏற்றம் என்கிற ஒவ்வொரு விடயமும் ஆண் இனத்திற்கு எதிரானது இல்லை. இரண்டாவது - பெண்களின் குறை களைச் சுட்டிக்காட்டுவது என்கிற போது அந்த குறை அவர்களிடம் வந்ததற்கான அடிப்படைக் காரணத்தை - சமுதாயத்தில் உள்ள குறை என்ன என்பது பற்றிய தேடல் இருக்க வேண்டுமே தவிர பெண்களின் குறைகளைப் பற்றி பேசுவதன் மூலமாக பெண்களுக்கு சமீப காலமாகக் கிடைத்திருக்கக் கூடிய விழிப்புணர்வை யோ-புரிந்துணர்வையோ இல்லாமல் போவ தற்கான விபத்து நடக்கக் கூடிய ஆபத்து இருக்கிறது. இதை நாம் கவனத்தில் எடுத் துக் கொண்டு செயல்பட்டாக வேண்டும். இன்னொன்று - நம் நாட்டில் தான் - பெண் விடுதலையைப் பேசுகிற இந்த நாட்டில் தான் தமிழ் பற்றி பேசக் கூடிய நாட்டில் - தமிழர் வளம் பற்றி பேசக் கூடிய இந்த நாட்டில் - ஆபாசமும் பேசப்படு கிறது. ஆபாச ஒழிப்பு என்பது இல்லாத வரைக்கும் பெண்ணிற்கான விடுதலை என்பதற்குச் சாத்தியம் கிடையாது. இந்த ஆபாச ஒழிப்பை யார் செய்வது? ஆண்கள் எழுதினால் ஆபாசம் இல்லாமல் போய் விடுமா? அல்லது பெண் இதிலிருந்து விலகினால் இல்லாமல் போய் விடுமா? என்ற நிலையில் தான் நாம் அடித்துக் கொண்டு சாகிறோமே தவிர அடிப்படையில் இந்த ஆபாசம் என்பது பெண் இனத்திற்கு மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ்ச் சமுதாயத்திற்கே தாழ்ச்சி செய்யக் கூடிய ஒரு விடயமாக என்றைக்கு நாம் கருதுகிறோமோ அந்த நினைப்பில் என்றைக்கு நாம் எழுதுகோலை கையில் எடுக்கிறோமோ அப்பொழுது தான் விடிவு வரும் . பொறுப்பு மிகுந்த எழுத்தாளர்கள் கூட - பொறுப்பு மிகுந்த கவிஞர்கள் கூட - எழுதுகோலை கையில் எடுக்கும் போது பெண்ணைச் சாடி விடுகிறார்கள். பெண் ணைச் சாடுவதன் மூலம் பெண்ணைத் திருத்தி ஆபாசத்தை ஒழிக்க முடியும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு கிடையாது. ஏனென்றால் ஒரு குழந்தை தவறு செய்கிறது என்றால் அந்த குழந்தைக்கான சூழலில் ஏதோ விஷத்தன்மை கலந் துள்ளது என்று பொருள். அந்த விஷத் தன்மையை நோக்கி நமது எழுதுகோல்கள் பிரயாணப்பட்டாக வேண்டும். காரணம் சட்டைப் பையில் தலை நிமிரும் பேனா வெற்றுத் தாளில் தலை குனிகிற பொழுது அது இந்த உலகத்தைப் புரட்டிக் போடுகிற நெம்புகோல் ஆகிறது என்று நான் நம்புகிற காரணத்தினால் சொல்கிறேன். படித்த பெண்கள் நிறைய வந்து விட்டார்கள். பொருளாதாரச் சுதந்திரம் இன்றைக்குப் பெண்களுக்குக் கிடைத் திருக்கிறது முன்பு பெண்களுக்கு இவை யெல்லாம் சாத்தியப்படவில்லை எனவே பெண்களிடம் சமுதாயத்திற்கு எதிரான விபத்துகளும் கூடி இருக்கின்றன. விபத்து கள் தவிர்க்கப்பட வேண்டுமென்றால் - பெண்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் போக்கு இந்த சமுதாயத்திலிருந்து விலகி யாக வேண்டும், குடும்ப நிறுவனத்தை எப்படி நிர்வகிப்பது என்ற ஆற்றலை வரும் தலைமுறையினருக்கு எழுத்தாளர் கள் வழங்கவில்லை என்றால் - படைப் பாளர்கள் வழங்கவில்லை என்றால் - சமு தாயம் மிகப் பெரிய விபத்தைச் சந்திக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.பெண்ணுக்கு விடுதலை வேண்டும் என்று பேசினாலும் விடுதலை பெற்ற பெண்ணை எப்படி மனைவியாக - தாயாக நடத்துவது என்ற வித்தையை இன்றைய சமுதாயம் கற்றுக் கொள்ளவில்லை. அந்த வித்தையை இந்தச் சமுதாயம் கற்றுக் கொண்டாக வேண்டும். குடும்ப நிறு வனத்தின் ஆணிவேராக - அச்சாணியாக இந்தப் பெண் இருக்கிறாள். தலைமுறை பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் இருந் தால் அந்தச் சமுதாயம் பெண்மையைக் கண்ணியப் படுத்தும் எனவும் கூறினார். தொழில் நுட்பத்திற்கும் மேலை நாட்டு கலாச்சாரத்திற்கும் தொடர்பு கிடை யாது, தமிழ்ச் சமூகத்தில் அப்படி இருப்பது போன்ற ஒரு குழப்பம் இருப்பதாகவும் - தொழில் நுட்பத்தில் நாம் முன்னேற வேண்டும் என்று சொன்னால், மேற்கத்திய கலாச்சாரத்தின்படி நம் வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கத் தேவையில்லை ஆசிய வழிப் பட்ட கீழைநாட்டுக் கலாச்சாரம் என்பது மிகப் பிரமாதமான கலாசாரம், அந்தக் கலாச்சாரத்திற்கு அடிப்படையாக இருப்பது குடும்ப நிறுவனம். அதில் அகவாழ்க் கையில் அச்சாணியாக இருக்கக்கூடிய பெண் - அவளைக் கருத்தில் வைத்துத் தான் வருங்காலம் அமைக்கப்பட வேண்டும் அப்படிப்பட்ட விழிப்புணர்வு உள்ள பெண்களுக்கு வரவேற்பு இல்லை இந்த விழிப்புணர்வை இந்தச் சமுதாயம் தன் கையில் எடுத்துக் கொண்டால் மிகச் சிறந்த வாழ்க்கை நெறியை நம் தமிழர்கள் எதிர்காலத்தில் பெறுவார்கள்.. இந்த விஷயத்தை எழுத்தாளர்கள் - படைப் பாளர்கள் - முக்கியமாகப் பொதுமக்கள் கையில் எடுத்தாக வேண்டும். தான் முனைவர் பட்டம் பெறுவ தற்கு ஒன்பது ஆண்டுகள் செலவழித்து இருப்பதாகவும் பொருளாதாரத்தில் பல சிக்கல்ளைச் சந்தித்துத்தான் தான் இந்த முனைவர் பட்டத்தைப் பெற முடிந்தது ஆனால் இன்று சமுதாயத்தில் ஒரு திரைப்படத்தில் நடித்ததற்காக ஒருவர் முனைவர் பட்டத்தை எவ்வளவு எளிதாகப் பெற முடிகிறது! இப்படிப்பட்ட விடயத்தை நாம் அனுமதிக்கக் கூடாது.

Saturday, September 6, 2008

இந்து மதவெறியர்களால் 50 ஆயிரம் கிறிஸ்துவர்கள் ஒரிசா காடுகளில் மறைந்து தவிக்கின்றனர்!

புவனேஸ்வர்- ஒரிசாவில் சங் பரிவார அமைப்புகளின் தாக் குதல்களையடுத்து, அங்கு வாழ்ந்த கிறிஸ்தவர்களில் 50 ஆயிரம் பேர் தப்பியோடி, உயிருக்குப் பயந்து காடுகளில் ஒளிந்து கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
சிலர் மிகக் குறைந்த அள வில் உள்ள அரசு முகாம்களில் தங்கியுள்ளனர். 4 ஆயிரத்துக் கும் மேற்பட்ட வீடுகள் முழு மையாக இடித்து நொறுக்கப் பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய தேவால யங்கள் எரிக்கப்பட்டுள்ளன. சிறிஸ்தவர்களைக் கொன்று குவித்து, அவர்களை இந்து மதத்துக்கு மாற்ற வலியுறுத்தி வரும் கொலைகாரக் கும்பல் களிடமிருந்து தப்பித்த கிறிஸ் தவர்கள் காடுகளுக்குள் ஓடிச் சென்று ஒளிந்து வாழ்கின்றனர். இந்த வன்முறை ஒரிசா மாநிலத்தில் மட்டுமல்லாது, தற்போது அண்டை மாநில மான மத்தியப் பிரதேச மாநி லத்திலும் பரவியுள்ளது.
இந்நிலையில் பொதுமக் கள் குழு ஒன்று திங்கள் கிழ மையன்று குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலைச் சந்தித்து ஒரு மனுவை அளித்தது. திரைப்படத் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநரான மகேஷ் பட் தலைமையிலான அந்தக் குழுவில் ஜாமியத் உலேமா தலைவர் மவுலானா மஹ்மூத் மதானி, தேசிய ஒருமைப்பாட் டுக் குழு உறுப்பினர் டாக்டர் ஜான் தயால், ஒரிசா ஆர்ச் பிஷப் ரேபேல் சீனால், டில்லி ஆர்ச் பிஷப் வின்சென்ட் கான் செசாவ், அனைத்திந்தியக் கிறிஸ்தவக் குழுச் செயலாளர் மது சந்திரா, டில்லி மற்றும் மும்பை கத்தோலிக்கர் மற்றும் மஹாராஷ்டிர மாநில சிறுபான் மையினர் ஆணையத் தலைவர் டாக்டர் ஆப்ரகாம் மத்தாய் ஆகியோர் இடம் பெற்றிருந் தனர்.
இந்திய அரசியல் சட்டப் பிரிவு 355 இன் கீழ் ஒரிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஹிந் துத்துவ வன்முறையாளர்களிட மிருந்து கிறிஸ்தவர்களைப் பாதுகாக்கப் போதிய நடவ டிக்கை எடுக்க 355 ஆவது பிரிவை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இக் குழு வினர் குடியரசுத் தலைவரைக் கோரினர். இம்மனுவில் ஒரிசா நிலைமை பற்றி விவரிக்கப் பட்டிருக்கிறது. விசுவ இந்து பரிசத்தைச் சேர்ந்த லட்சும ணானந்த சரசுவதி, மாவோ யிஸ்டுகளால் கொல்லப்பட்டி ருக்கலாம் என்று கூறப்பட் டுள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் நாளன்று தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் தாக் கப்பட்டதைப் போலவே இப் போதும் கந்தமால் பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ள நிலையில், சட்டம் ஒழுங்கு நிலை நாட்டப்படவேண்டும் என்று குழு கூறியுள்ளது

Thursday, September 4, 2008

கூறுகெட்ட பிராமணா-உனை நீயே உயர்த்தி சொலல் ஏனடா?

பிராமணரல்லாதவர்கள்-
தீண்டின குளத்து ஜலத்தை,
ஒருங்கே இறைத்து! அதில் ஜனிக்கும் ஊற்று நீரை எடுத்துப் பானஞ்செய்வது,
அதிக கஷ்டமானதால்! அது தீட்டல்லவென்றும். முகந்துவைத்த குடத்தின் ஜலத்தை அச்சூத்திரர் தீண்டின்.... அதைக் கொட்டிவிட்டு.
மீண்டும் சுலபத்தில் முகந்து கொள்ளக் கூடுமாதலால் அதைமட்டும் தீட்டெனவும், பிராமணர் கூறுகின்றனர். ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
நியாயாதிபதிகளால்,
குற்றவாளிகளென்று தீர்மானிக்கப்பட்டு- சிறைச்சாலைகளில் அடைக்கப்படும், பிராமணர்களென்போர்!-
சிறைச்சாலைகளில் தாங்களுண்ட பாத்திரங்களை, நாடோறும் அலம்பி அவற்றிலேயே போஜனமுண்டு வருவதும், அவற்றை யெச்சாதியார்த் தீண்டினும் அவற்றிலேயே போஜன முண்பதும் தீட்டல்லவா?
சிறைச் சாலைகளினின்று விடுதலையான பின்- அப்பிராமணர் சமையல் செய்யும் பாத்திரங்களைப் பிராமணரல்லாதவர்கள் பார்க்கின்
பார்த்த மாத்திரத்தில் அவை தீட்டாயினவெனக் கூறி அவற்றை உடைத்தெறிய வேண்டுமாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணர் தாம் கருதிய விடத்திற்குச் செல்ல,
இரயில்வே ஸ்டேஷன்களில் டிக்கட் வாங்கும்போது- பறையரென்றும், சக்கிலியரென்றும் பாராமல் ஒருவர் மீதொருவர் நெருக்கவும்,
ஒருவர் வேர்வை ஒருவர்மீது வடியவும்,
மிக்க வருத்தத்துடன் நின்று டிக்கட்டு வாங்கிக் கொண்டு- வண்டியின் மீது உட்கார்ந்தபின்...
அப்பிராமணர் தம்பக்கம் உட்கார்ந்துள்ள அப்பறையர் சக்கிலியரை நோக்கி அடா! ஈனஜாதிப்பயலே! மேலே விழாதடா, தொடாதடா-
எனத் தமது ஜாதியினை மேம்படுத்திக் கொள்வதை நாம் பன்முறையும் பார்த்து வருகிறோமே.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
கடவுளைச் சொப்பனத்தில்-
பார்ப்பவர்களாகிய பிராமணர்!
தாங்கள் இருப்புப்பாதை மார்க்கமாக,
நெடுங்தூரஞ் செல்ல நேரிட்டபோது-
புளியோரை ,ததியோதனம் முதலிய போஜன வகைகளுடன்...
வண்டியேறிச் செல்லுகையில் தம் அருகில் உட்கார்ந்திருக்கும் எச்சாதியாரையும் கவனியாமல்,
தாம் கொண்டு வந்த போஜனத்தை யுண்பதை மற்றெச் சாதியார் தீண்டியும் பார்த்துமிருந்தும்,
போஜனமுண்டு -
தம் மனைக்கு ..
தாமுண்ணும் போஜனத்தை காவலர்களும், பார்க்கலாகாதென்று-
பெருமை பேசிக் கொள்ளுகிறார்கள்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணர் தாம் ஸ்நானஞ்செய்தபின் ஸ்நானஞ் செய்யாதிருக்கும் தம்மினத்தவரே தம்மைத் தீண்டலாகாதென இதர ஜாதியாரிடத்தும் வாசகம் படித்து தம்மைத்தாமே புகழ்ந்து கொள்ளும் விவேகிகளாகிய பிராமணரில் திரளான பெயர் எவர்களிலும் இழிகுலத்தாராகிய விலைமாதர் மனைகளிலும் ஓட்டல்களிலும் மது மாமிசாதிகளுடன் போஜனமுண்டு வருகின்றனர்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
சமையல் செய்யும் மட் பாத்திரங்கள் மிகவும் அற்பக்கிரயமுடையன ஆதலால்,
அவை பிராமணரல்லாதவர்களால் பார்க்கப்படுவதினாலேயே-
தீட்டாயினவென பெருமை சொல்லிக் கொண்டு,
அவற்றை உடைத்தெறிய வேண்டுமென மொழிகின்றனர். மட்பாத்திரங்களிலும் விலை மிகுந்த செப்புப் பித்தளை பாத்திரங்களோ சூத்திரர் தீண்டத் தீட்டாயினும் அவற்றை உடைத்தெறியாது, புளிசாம்பராதிகளால் தேய்த்து, அலம்புவதே போதுமானதாம்.!!!
அவற்றிலும், விலையேறப் பெற்ற-
வெள்ளிப் பாத்திரங்கள் சூத்திரரால் தீண்டப்படினும் புளிசாம்பராதிகளால் தேய்க்கின் தேய்ந்து நஷ்டமாகுமெனக் கருதி ஜலத்தினால் அலம்புவதே போது மெனவும், அதிலும் விலைமிகுந்த பொன் இரத்தினபாணங்கள் ஜலம் படுமாயின் அவற்றின் பளபளப்புப் போய் விடுமென வெண்ணி அவற்றிற்குத் தீட்டில்லையெனவும்,
வீதிகளிலும், கடைகளிலும்,
உத்தியோக சாலைகளிலும், ஜலம்தேடி அலம்பி-
வாங்க அனுகூலிக்கா திருக்கும் ரூபா, அணா, பைசாக்களும் ஜலம் பட்டவுடன் பயன் படாதழிந்துபோகும் நோட்டுகளுக்கும் முத்திரை காகிதங்களுக்கும், தீட்டில்லையாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
பிராமணரல்லாதவர்கள் தீண்டின ஜலத்தையும் தீண்டோமென்று பெருமை படைத்துக் கொள்ளும் பிராமணரில்,
அநேகர் இங்கிலாந்தினின்று செய்து வரும் மீன் எண்ணெயையும், ஆடு மாடு கோழிகளின் மாமிசங்களால் செய்தனுப்பப்படும் பிஸ்கட் முதலிய தின்பண்டங்களையும்,
பிராந்தி, உஸ்கி முதலிய மயக்கத் திராவகங்களையும் உண்ணுவதே சுகிர்தமாம்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
துரைத்தன வைத்திய கலாசாலையில் வைத்திய சாஸ்திரங் கற்றுப் பரீட்சையில் தேர்ந்து வைத்திய உத்தியோகத்திலமர்ந்திருக்கும் பிராமண வைத்தியர்கள் மூலம், பவுத்திரம், நீரடைப்பு முதலிய வியாதிகளில் வருந்தும் பிராமணரல்லாதவர்கள்,
பறையர், சக்கிலியர் முதலியவரின்-
வியாதிகளைப் பரிசோதித்தும், கத்தியால் வகுத்தும், கழுவியும், அவிழ்தப் பிரயோகஞ் செய்தும், பரிகரித்து வருவதை நாம் பார்த்து வருகிறோமே.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ?!
- டி.என். அநுமந்து உபாஸகர் திராவிடன் 17.8.1917
*********************************************************************
படித்த பார்ப்பன நண்பரே!
------------------------------------

"தன்மான இயக்கத்தின் தன்மை உணர பறையனாய் இருந்து பார்" கவிஞர் ஒருவர் சொன்னதை நான் சொன்னபோது பதை பதைத்துப் போனாயாம். நண்பர் சொன்னார்
எதிர்பார்க்கவில்லை - நான் பறையனாய் வாழ்வதாய் நினைத்துப்பார் என்றாலே நெருப்பிலே குளிப்பதுபோல் படபடப்பாய் நீ - என்று எதிர்பார்க்கவில்லை - நான்
அவா - அவா பூர்வ ஜென்மப் பலனாலே அந்த அந்தச் சாதியிலே பிறந்திருக்கா போன ஜென்மத்திலே புண்ணியம் செய்தவா நான் பூணூல் சாதியிலே பிறந்திருக்கிறேன் அட, என்னைப்போய் பறையனாய் இருந்துபார் என்று சொல்லி விட்டாரே கிசுகிசு செய்திபோல எனது செவிக்குள்ளும் வந்தது. இரத்தம் கொதிக்கிறது! இருப்பது 21-ஆம் நூற்றாண்டுதானே! பூணூல் சாதியிலே பிறந்தது பூர்வ ஜென்மப் பலனா? எவன் சொன்னான்? உனது உடம்பிலே நீ போட்டிருக்கும் பூணூல் எத்தனை உயிர்களை வதைத்தது. உடல் ரீதியாய் உள ரீதியாய் பூணூல் வரலாறு முழுக்க பொய்கள் - வன்மம் - வஞ்சனை உழைக்காமல் உண்டு கொழுக்க பூர்வ ஜென்மம் ஜோதிடம் கடவுள் அவதாரம் கத்திரிக்காய் எல்லாம்! ராபின் சர்மாவின் புத்தகத்தைப் படித்து ஆகா, என்னமாய் சொல்லியிருக்கின்றார் சிம்பதிக்கும் எம்பதிக்கும் வேறுபாட்டை சிலிர்த்து சிலிர்த்து சொல்வாயே! சிம்பதி என்றால் பரிதாப்படுவது எம்பதி என்றால் இன்னொருவர் நிலையில் நம்மை நிறுத்திப் பார்ப்பது.
அட - எம்பதி அடிப்படையில் கொஞ்ச நாள் பூணூலைக் கழட்டிப் போட்டுவிட்டு பறையனாய்த்தான் வாழ்ந்து பார்க்க கழனிக்கு வாயேன்! உழைக்கும் மக்கள் படும் பாட்டைப் பாரேன்! உண்ண உணவு இருக்கிறதா? பார்! உடுக்க உடை இருக்கிறதா? பார்! இருக்க இடம் இருக்கிறதா? பார்!
எதுவுமே இல்லாத இவனுக்கு பூணூல் கற்பித்த புடலங்காய் கடவுள்கள் மட்டும் எதற்கு என்று யோசித்துப் பார்? அப்போது தன்மான இயக்கத்தின் "தன்மை உணரப் பறையனாய் இருந்து பார்" என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும் பூணூல் என்பது பூர்வ ஜென்ம அரண் அல்ல. அசிங்கம் என்பதும் புரியும்.

Friday, August 29, 2008

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதி!

  • காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதிசெய்கிறது என்று ஜெயந்தி நடராஜன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, சென்னை சத்தியமூர்த்திபவனில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான அரசில் தி.மு.க அங்கம் வகிக்கிறது. புதிதாக அமையவுள்ள மாநில செயற்குழுவில் விவாதித்து காங்கிரஸ், தமிழக அரசில் தனது பங்கை கேட்கும் என்று தெரிவித்தார். அகில இந்திய செய்திதொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் செய்தியாளர்களிடம் பேசும்போது, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதக்கலவரத்தை தூண்ட பாரதிய ஜனதா சதிசெய்கிறது என்று குற்றம் சாட்டினார். குமரிஅனந்தன், காயத்திரி தேவி ஆகியோர் உடனிருந்தனர்.

Thursday, August 28, 2008

ஒரிஸ்ஸாவில் சங்பரிவார் வெறியாட்டம்

தமுமுக பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி பத்திரிக்கைகளுக்கு விடுத்திருக்கும் பத்திரிக்கை அறிக்கை:
ஒரிஸ்ஸாவில் கிறித்தவர்களுக்கு எதிராக விஸ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் சக்திகள் நடத்தி வரும் வன்முறை வெறியாட்டத்தை தமுமுக வன்மையாகக் கண்டிக்கிறது. ஒரிஸ்ஸாவில் உள்ள துமுடி பந்த்கா என்ற இடத்தில் சுவாமி லக்ஸ நந்த சரஸ்வதி உள்ளிட்ட ஐந்து பேர் படுகொலை செய்யப் பட்டது கண்டனத்திற்குரியது.
இதை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டு ஒரிஸ்ஸா முழுவதும் வி.ஹெச்.பி தலைமையில் ஹிந்துத்வா சக்திகள் நடத்திவரும் வன்முறை வெறியாட்டம், நமக்கு குஜராத்தை நினைவூட்டுகிறது.
கடந்த 23.08.2008 தேதியிலிருந்தே தொடர்ச்சியாக வன்முறைகள் வெடித்துக் கொண்டிருப்பதும், அந்த வன்முறைகளால் பல்லாயிரக் கணக்கான கிறிஸ்தவர்கள் பாதிக்கப் பட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியது.
ஒரிஸ்ஸா முதல்வர் நவீன் பட்நாயக் கலவரத்தை அடக்க, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளையும் படுகொலைகளையும் நடத்தி வரும், மதவெறியர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு, தயவு தாட்சண்யமின்றி தண்டிக்கப் படவேண்டும் என தமுமுக வலியுறுத்துகிறது

Saturday, August 23, 2008

அண்ணா தி.மு.கழகம் மதவாத கட்சி...? சோலை

திராவிடக் கட்சிகள் மதவாதக் கட்சிகள் அல்ல என்று இடதுசாரி அரங்கிலிருந்து ஒரு குரல் எழுந்ததாக ஏடுகள் சுட்டிக் காட்டியிருக்கின்றன.

திராவிடர் கழகம் - நிச்சயமாக மதவாதக் கட்சி அல்ல.

தி.மு.கழகம் - உறுதியாக மதவாதக் கட்சி அல்ல.

அண்ணா தி.மு.கழகம்? கேள்விக்குறி படமெடுத்து நிற்கிறது.

அமரர் எம்.ஜி.ஆர். இருந்தவரை அந்தக் கழகம் மதவாத சக்திகளுக்கு வேலி போட்டு நிறுத்தி இருந்தது. மறைந்த ஜனா கிருஷ்ணமூர்த்தி உள்பட எத்தனையோ பி.ஜே.பி. தலைவர்கள் மரியாதை நிமித்தமாவது அவரைச் சந்திக்க ஆசைப்பட்டனர். ஆனால், கடைசி வரை கதவுகள் திறக்கப்படவில்லை.

செல்வி ஜெயலலிதா அ.தி.மு.க.வின் தலைமைப் பொறுப்பேற்றார். தான் தலைமை ஏற்பது திராவிட இயக்க வழி வந்த கழகம் என்பது அவருக்குத் தெரியாதா? தெரியும். ஆனால், தான் ஒரு இந்துத்துவா என்பதனை அவர் மறைத்ததில்லை. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து அதன் மீது ராமருக்கு ஆலயம் அமைப்போம் என்று அத்வானி படை திரட்டிச் சென்றார். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங் தள் உள்பட எல்லா இந்து முன்னணி அமைப்புகளும் பங்குகொண்டன. இந்தத் திருப்பணியில் அண்ணா தி.மு.கழகமும் சிம்பாலிக்காகக் கலந்து கொண்டதற்காக விஸ்வஹிந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கல் பாராட்டுத் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து டெல்லியில் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுக் கூட்டம் நடைபெற்றது. செல்வி ஜெயலலிதா கலந்துகொண்டார். பாபர் மசூதி இடிக்கப்பட்டதை நியாயப்படுத்தி அவர் ஆணித்தரமாக வாதிட்டார். அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்வானியே அம்மாவின் வாதம் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கிவிட்டார். `இந்த அளவிற்கு எங்களால் கூட வாதாட முடியாது' என்றார்.

பாபர் மசூதியை இடித்துத்தான் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமா என்று பின்னர் விவாதம் எழுந்தது. அயோத்தியில் அங்கே ராமருக்கு ஆலயம் எழுப்பாமல் இத்தாலியிலா எழுப்ப முடியும்? என்று எரிசரம் கொடுத்தார் ஜெயலலிதா.

இந்துக்களின் உணர்வுகளுக்கு வடிவம் கொடுக்க அவர் அச்சப்பட்டதேயில்லை. அந்த வகையில் பி.ஜே.பி. யே அவரிடம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

2001-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வைத் தனிமைப்படுத்த அண்ணா தி.மு.க. ஓர் அணி அமைத்தது. அந்த அணியில் இடதுசாரி கட்சிகள் அங்கம் பெற்றன. இஸ்லாமிய, கிறிஸ்துவ அமைப்புகள் ஆதரவுக் கரம் நீட்டின.

சென்னை கடற்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடத்தியது. அந்தக் கூட்டத்தில் ஜெயலலிதா பங்கு கொண்டு, பி.ஜே.பி.யோடு உறவு கொண்டதற்காக வருத்தம் தெரிவித்தார். இனி எந்தக் காலத்திலும் அந்தத் தவறைச் செய்யமாட்டேன் என்று உறுதிமொழி தந்தார். அன்றைய நிலையில் அவர் அப்படி வாக்குறுதி தந்தது காலத்தின் கட்டாயம். ஆனாலும் அவர் இந்துத்துவ ஒளி விளக்குதான்.

தேர்தலுக்குப் பின்னர் அவர் அரியணை ஏறினார். அவர் செய்த முதல் பணி என்ன? மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலில் அன்னதானம் என்று ஆரம்பித்தார். தி.மு.க. தயவில் சட்டமன்றத்தை எட்டிப்பார்த்த பி.ஜே.பி. உறுப்பினர்கள் ஆரவாரம் செய்தனர்.

அடுத்து, அவர் செலுத்திய ஏவுகணை தோழமைக் கட்சிகளைத் திகைக்க வைத்தது. ஆனால் இந்துத்துவா உலகம் `அன்னையே வாழ்க' என எக்காளம் ஊதியது. ஆம். அவர் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வந்தார். மையத்தில் ஆளும் போதும் மாநிலங்களில் ஆளும் போதும் அப்படி ஒரு சட்டம் கொண்டுவர பி.ஜே.பி.க்கு துணிச்சல் பிறந்ததில்லை. இந்தியாவிலேயே முதன்முதலாக இப்படிச் சட்டம் கொண்டு வந்தவர் ஜெயலலிதாதான். அதனைப் பார்த்துதான் நரேந்திர மோடியே அப்படி ஒரு சட்டம் கொண்டு வந்தார்.

நள்ளிரவில் கலைஞர் கைது செய்யப்பட்டார். இந்தியா முழுமையும் எழுந்த எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்டு அன்றைய பிரதமர் வாஜ்பாயே ஆடிப்போய்விட்டார். அ.தி.மு.க. அரசு டிஸ்மிஸ் செய்யப்படலாம் என்று ஆங்கில ஏடுகள் எழுதின.

ஆனால், செல்வி ஜெயலலிதாவிற்கு ஆதரவாக நாகபுரியிலிருந்து ஒரு குரல் எழும்பியது. அ.தி.மு.க. அரசு மீது கை வைக்காதே என்று பகிரங்கமாக வாஜ்பாய்க்கே அந்தக் குரல் கட்டளையிட்டது. அந்தக் குரல் பி.ஜே.பி.களின் குருபீடமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத் தலைமையின் ஆவேசக் குரல்.
எங்கோ வனாந்தரத்தில் பிறந்த மூங்கில் இங்கே புல்லாங்குழலாக கண்ணனின் கரங்களில் காட்சி அளிக்கவில்லையா? அதேபோல திராவிட இயக்க வழி வந்த அ.தி.மு.க. இன்றைக்கு இந்துத்துவா கோட்பாடுகளின் பூபாளம் என்று ஆர்.எஸ்.எஸ். அறிவுறுத்தியது.

`படுகொலைகளுக்கு 48 மணி நேர சுதந்திரம் அளித்தவர்', `சைத்தான்களுக்கு சல்லடம் கட்டி விட்டவர்' என்றெல்லாம் நரேந்திர மோடிக்குப் பட்டங்கள் சூட்டினார்கள். ஆனால், அதற்கு அப்பால் அவர் இந்துத்துவாவின் போர்ப் படைத் தளபதி என்பதனை அவர்கள் மறந்துவிட்டனர். எனவேதான் மோடியின் முடிசூட்டு விழாவில் செல்வி ஜெயலலிதா பங்கு கொண்டார். பரிசளித்தார்.

அந்த விழாவில் பி.ஜே.பி. முதல்வர்கள் அல்லாமல் கலந்துகொண்ட ஒரே முதல்வர் ஜெயலலிதாதான் என்று பெருமை பெற்றார்.

மோடியின் முடிசூட்டு விழாவில் கலந்து கொள்வதா என்று இடதுசாரி கட்சிகள் கோபக் குரல் எழுப்பின. ஆனால் அதனைப் பற்றியெல்லாம் அம்மா கவலை கொண்டதில்லை. கொண்ட கொள்கையில், ஏற்றுக்கொண்ட லட்சியத்தில் அவர் உறுதியாகப் பயணிப்பவர்.

சேதுசமுத்திரத் திட்டம் தமிழகத்தின் ஒரு நூற்றாண்டுக்காலக் கனவுத் திட்டம். அந்தத் திட்டத்தை வலியுறுத்தாத தமிழகத் தலைவர்களே இல்லை. ஆனால் அந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் லட்சோப லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் கடலுக்குள் ராமர் கட்டிய பாலத்திற்குச் சேதாரம் ஏற்படும் என்று குரல் கொடுத்து அந்தத் திட்டத்தையே தடுத்து நிறுத்தியிருப்பவர் ஜெயலலிதா. சேதுத் திட்டமா? ராமர் பாலமா? ராமர் பாலம் சேதப்பட்டால் கோடானு கோடி இந்துக்களின் இதயம் புண்பட்டு விடும் என்று வாதிட்டு வருபவர் செல்வி ஜெயலலிதா.

அவருடைய செயல்பாடுகளெல்லாம் எந்தத் தத்துவக் கோட்டிற்குள் அடங்கும் என்று ஆராய்வது வேலைவெட்டி இல்லாதவர்கள், பொழுதெல்லாம் கட்டாந்தரையில் புல் பறிப்பதற்குச் சமம். அவருடைய அறிவிப்புக்கள் கணீரென்று வரும். செயல்கள் மத்தாப்புச் சிரிப்போடு அட்டகாசமாக வரும். மதச் சார்பற்ற கோட்பாடுகளெல்லாம் அவரைப் பொறுத்தவரையில் நமத்துப் போன வெடிக்காத பட்டாசுகள்தான்.

`நான் குறிப்பிட்ட இனத்தைச் சேர்ந்தவர்' என்று சட்டமன்றத்தில் அவர் சங்கநாதம் செய்தார். எங்காவது மேடையில் இப்படிப் பிரகடனம் செய்தால் காற்றோடு போயிருக்கும். சரித்திரத்தில் பதிய வேண்டும் என்பதற்காக சட்டமன்றத்திலேயே பதிவு செய்து விட்டார்.

அண்மையில் குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில் பி.ஜே.பி. வேட்பாளர் ஷெகாவத்திற்குத்தான் அ.தி.மு.க. கழகம் வாக்களித்தது.

இப்படி ஊசலாட்டமின்றி இந்துத்துவ அடிச்சுவட்டில் அ.தி.மு.க. தெளிவாக நடைபோட்டுச் செல்கிறது. எனவே, அந்தக் கழகம் மதச்சார்பற்ற கட்சியா, மதவாதக் கட்சியா என்று மூளையைக் குழப்பிக் கொள்ளலாமா?

சீட்டுப் பங்கீடு அடிப்படையில் உடன்பாடு காணவிரும்புகிறவர்கள் அந்தக் கழகத்தை அணுகலாம். கூட்டணியும் தேர்தல் வரைதான். அதன் பின்னர் ஒவ்வொரு கட்சியும் தங்கள் வழியில் பயணம் செய்யலாம்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் ஓர் அணி. தீர்ப்பிற்குப் பின்னர் வேறு அணி என்ற நிலையை அ.தி.மு.க எடுக்கும் என்பதை அடிக்கடி சிலர் சுட்டிக்காட்டுவதையும் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்
நன்றி:குமுதம் ரிப்போர்டர் 24.08.08

அன்றே சொன்னோம் இவ்வாறெல்லாம் நடக்குமென்று:தமிழ் சங்கமி.

சென்னை: ஒகேனக்கல் பிரச்சனையில் கர்நாடக முதல்வர் எடியூரப்பா தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்திற்கு வந்திருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் தொடர்பாக மீண்டும் தமிழர்களின் உரிமைக்கு எதிரான கருத்தை தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி, தர்மபுரி மக்களின் குடிநீர் திட்டமான அத்திட்டம் தமிழக எல்லைக்குள் தமிழ்நாட்டிற்கு உரிமையான தண்ணீரில் நிறைவேற்றப்படும் திட்டம் என்பதை கர்நாடகம் மற்றும் தமிழகத்தை சேர்ந்த மூத்த அரசு உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து ஏற்கனவே அறிவித்துள்ளனர்.

எனவே இத் திட்டத்தை தமிழகம் நிறைவேற்ற கர்நாடகாவிடம் அனுமதி கோர வேண்டிய அவசியமில்லை. இரு மாநில எல்லைகளும் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தலையிடும் உரிமை அம் மாநிலத்துக்கு எள்ளளவும் கிடையாது.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா அவரது கட்சிக்கு விசுவாசத்தை காட்டிக் கொள்வதற்காக தமிழக பிரச்சினையில் இவ்வாறு தலையிடுவதற்கு முன் அவரது கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டு தெரிந்து கொள்ளட்டும்.

அதை விடுத்து பிரச்சினை எதுவுமில்லாத தமிழக ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்ட பிச்சினையில் பிரதமர் தலையிட வேண்டும் என்றும், அதற்கு தீர்வுகாண உச்சநீதிமன்றம் செல்வோம் என்றும் எடியூரப்பா மிரட்டல் விடுத்திருப்பது இந்திய நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கே விடுக்கும் சவாலாகும்.

கர்நாடக முதல்வர் எடியூரப்பா இவ்வாறு தமிழகத்திற்கு தொடர்ந்து இடையூரப்பாவாக இருந்து செயல்பட்டு வரும் போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்று கூறியுள்ளார்.

Friday, August 15, 2008

எது சுதந்திரம்?

நேற்று என் பிள்ளையின் பள்ளியில்,
சுதந்திர கொடியேற்றத்திற்கு பெற்றோர் பங்கேற்க அழைப்பு!
கொடியேற்றி மிட்டாய் வழங்கியபின்,
வீடு திரும்பும் வழியில் சேரியை கடக்கையில்...
நிர்வாணமாய் ஆடையின்றி திரியும் சின்னக்குழந்தைகளை கண்ட பின்,
என் மனம் சிந்தித்தது....
கொடியை இறக்கி அந்த துணியை ஆடையாய் ஒரு சிறுவன்னுக்கேனும் தந்தால்?
இந்தியா மானம் காப்பாற்றப்படுமே?
இப்படி நாட்டில் உள்ள கொடிகளை கழற்ற என் மனம் விரும்பினாலும்...
எனக்குச் சுதந்திரம் இல்லை-
நினைத்துப்பார்ததில் மிட்டாய் கசந்ததே!
(ஒரு காள் வெள்ளையன் ஆழ்வது தொடர்ந்திருந்தால் சேரிக்கெல்லாம் ஆடை கிடைத்திருக்குமோ?)
-----தபால்காரன்.

பட்டுக்கோட்டையாரின் சுதந்திர பாட்டு.

சுதந்திரத்தைப் பெற்றுவிட்டாள் இந்தியத்தாய்!
சொல்லவொண்ணா மகிழ்ச்சியிலே திளைப்பாள் என்று ,
தூங்காமல் இரவுபகல் பாடுபட்டதோழர்களே! தாய்மாரே! தந்தைமாரே!
சிறைவாழ்க்கை வேற்றாரின் கொடியசட்டம்,சித்ரவதை-
குண்டடிகள் யாவுந் தாங்கித் தேகமெலாந் தியாகவடுப் பெற்று நின்ற சிங்கங்காள்!
செக்கிழுத்த சித